புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 30, 2022)

பாக்கியம் பெற்ற மனுஷன்

சங்கீதம் 112:9

வாரியிறைத்தான், ஏழைகளு க்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்;


ஒரு ஊரிலே, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியி னால், அந்த ஊரிலுள்ள குடியானவனுடைய குடும்பம் மிகவும் பாதிக் கப்பட்டது. வீட்டின் வாடகைப் பணம்கூட கொடுக்க முடியாத நிலை மையில், நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டி ருந்தான். அடுத்த வேளை ஆகாரத்தைக் குறித்து நம்பிக்கையற்று, உதவிக்காக எங்கே போவேன் என்று என்று வழிதெரியாமல் இருக்கும் போது, அந்த ஊரிலு ள்ள தயாள குணமுள்ள ஒரு மனிதனாவன், அந்த நிர்கதியான நிலையிலுள்ள குடும்பத்திற்கு உதவி செய்தான். அதனால், அந்தக் குடியானவன் தனக்கேற் பட்ட இக்கட்டிலிருந்து விடுதலை யாக்கப்பட்டான். அந்த வறுமையின் நாட்களை கடந்து, பல ஆண்டுகள் கடந்த போதிலும், தான் பெற்ற உதவியை மறக்காத அந்த குடியா னவன், ஒவ்வொரு ஆண்டும், தான் இருந்த நிலையில் தற்போது இருக்கும் குடும்பங்களுக்கு தன்னால் முடிந்த பொருளுதவியையும் சரீர உதவியையும் செய்து வருவான். அது மட்டுமல்லாமல், தனக்கு உதவி செய்த மனிதனாவனையும் அவன் குடும்பத்தையும் ஆசீர்வதித்து, அவர் களுக்காக தேவனுக்கு நன்றியை தெரிவித்து வந்தான். ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே, இந்த சம்பவத்தை மையமாக வைத்து, நம்மு டைய வாழ்க்கையை இந்த நாட்களிலே ஆராய்ந்து பார்க்க வேண்டும். தேவனிடம் எத்தனையோ நன்மைகளை பெற்றிருக்கின்றோம். தேவ தயவினாலே, மனித தயவுகளை பெற்றிருக்கின்றோம். அவைகளுக்காக, தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சென்றுவிட்டால் போதுமா? இக்கட்டு நாட்களில் உதவிய மனிதர்களை மறந்து விட முடியுமா? அந்த ஏழைக் குடியானவன் செய்தது போல, நாமும் நம்முடைய மனமார்ந்த கிரியை கள் வழியாக, மனிதர்களுக்கும், தேவனுக்கும் நன்றியறிதலுள்ளவர்க ளாக இருக்க வேண்டும். கண்காண்கின்ற மனிதர்களுக்கு நன்றியறிதலு ள்ளவனாக இருக்காதவன், கண்காணாத தேவனுக்கு எப்படி நன்றியித லுள்ளவனாக இருப்பான்? கஷ;டதின் நாட்களிலே பலர் நம்மை நினை யாது போயிருக்கலாம், ஆனால், கைவிடாத தேவனோ, நமக் கென்று மனிதர்களை ஆயத்தப்படுத்தியிருந்தார். எனவே, எப்போதும், விசேஷ மாக இந்த நாட்களிலே, திக்கற்றவர்களையும், ஒடுக்கப்பட்டு வழி தெரி யாதிருக்கின்றவர்களையும் உங்கள் திராணிக்குத்தக்கதாக விசாரியுங்கள்.

ஜெபம்:

தாழ்மையிலிருந்த என்னை தூக்கியெடுத்த தேவனே, நீர் செய்ய நன்மைகள் எண்ணற்றவைகள். உம்மைப் போல நானும் தயாளகுணமுள்ளவனாக வாழும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:27