தியானம் (மார்கழி 29, 2022)
யார் நம்மை ஆளுகை செய்கின்றார்கள்?
சங்கீதம் 96:10
கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்
ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்த மக்களில் சிலர், தங்களது கோரிக்கைகள் தாங்கள் குறித்த, கால அவகாசத்திற்குள் நிறைவேற்றப்படாது போன போது, தங்கள் கிராமத்தின் அதிகாரிக்கு எதிராக முறுத்து அவருக்கெதிராக முறையீடு செய்தார்கள். அதிகாரியனாவர் செய்யும் காரியங்களை விமர்சித்து ஆர்பாட்டங்களை நடத்தினார்கள். கிராமத்தின் அதிகாரியானவர், இன்னும் தலை வராகவே இருந்த போதும், இவர் எங்களுடைய அதிகாரி அல்ல என்று அறிக்கையிட்டார் கள். இந்த சம்பவத்தை சற்று சிந்தித் துப் பாருங்கள். தேவனாலே நியமிக்கப்பட்ட தேவனுடைய தாசனாகிய மோசேயானவன், தேவனுடைய ஜனங்களை எகிப்தின் அடிமைத்தன வாழ்க்கையிலிருந்து விடுதலையாக்கி வனாந்திரத்தின் வழியாக, வாக் களிக்கப்பட்ட தேசத்திற்கு அழைத்து சென்றான். தேவனுடைய அழை ப்பை பெற்ற, தேவ ஜனங் கள், தங்கள் தேவனுடைய மகிமையையும், அவர் எகிப்திலும் வனாந் தரத்திலும் செய்த அதிசயங்களையும் அடை யாளங்களையும் கண்டிரு ந்தும், தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்து, அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமல், பத்துமுறை தேவனைப் பரீட்சைபார்த்தார்கள். சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய ஆளு கையை அசட்டை செய்தார்கள். அந்த மகத்துவமான கர்த்தருடைய ஆளுகையி லிருந்து தங்களைத் தாங்களே விலக்கிக் கொண்டார்கள். ஆனால், அவர்கள் மத்தியிலே இருந்த காலேப்பும் யோசுவாவும் தேவனுடைய ஆவியை உடையவர்களாகவும், உத்தம மாய் தேவனை பின்பற்றுகின்ற வர்களாகவும், தேவ சத்தத்திற்கு கீழ்படிவுள்ளவர்களாவும் இருந்தார்கள். இன்று எப்படிப்பட்ட ஆவி நம் உள்ள ங்களை ஆளுகை செய்கின்றது. பிரியமானவர்களே, உங்களை நித்திய ஜீவனுக்கென்று அழைத்த தேவன் யார்? அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், ஒருவ ராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவ ரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிரு க்கிறவர்; (1 தீமோ 6:15-16). அவரே நம்மை ஆளுகை செய்கின்றார். எனவே தேவ ஆவியை பெற்ற நாம், தேவ ஆவியானவருடைய ஆளுகையை குறித்து முறுமுறுத்து, உன்னதமானவருடைய பாதுகாப் பைவிட்டு தூரம் போகாமல், நன்றியும், கீழ்படிவும், பொறுமையுமு ள்ளவர்களாக, அவர் காட்டும் சத்திய வழியிலே நடந்து முன்னேறு வோமாக. அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிரு ப்பதாக. ஆமென்.
ஜெபம்:
பெரியவரும்இ மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவரும், எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவருமாகிய தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மை பற்றிக் கொண்டு வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எண் 14:22-24