புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 28, 2022)

நன்றி நிறைந்த உள்ளம்

1 பேதுரு 5:7

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்


ஒரு மகனானாவன், தான் விரும்பிய சில பொருட்களை தனக்கு வாங் கிக் கொண்டு வரும்படிக்கு தன் பெற்றோரிடம் கேட்டிருந்தான். அவ ற்றில் ஒன்றை அவன் பெற்றோர் அவனுக்கு கொடுப்பதற்கு காலம் இரு க்கின்றது என்று அறிந்து தாமதம் செய்தார்கள். அதனால் அந்த மக னானவன் தன் பெற்றோர் மேல் கோபம் கொண்டான். வருடம் முழுவ துமாக அநேக காரியங்களைத்; தன் பெற்றோரிடமிருந்து அவன் பெற்ற போதும், தான் விரும்பியதும், தன க்கு கிடைக்காததுமான அந்த ஒரு பொருளைக் குறித்தே முறு முறு த்துக் கொண்டிருந்தான். அதைக் கண்ட அவன் தாயானவள் அவனை அழைத்து: மகனே, நானும் உன் அப்பாவும் உன்னுடைய நலனுக்காகவே பிரயாசப்படுகின்றோம். உன க்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே எங்களுடைய பிரதா னமான நோக்கம். இந்த ஆண்டு முழுவதும் நீ எத்தனையோ காரிய ங்களை பெற்றிருந்தும், ஒரு பொருளுக்காக நீ முறுமுறுப்பது, உன்னு டைய நன்றியற்ற தன்மையைக் காண்பிக்கின்றது. இது உன் வாழ்க்கை க்கு நன்மை தராதது. நீ விரும்பியதெல்லாம் இந்த உலகத்தில் நீ நினைத்த பிரகாரம் நடை பெறப் போவதில்லை. பெற்ற நன்மைகளை நினைத்து நன்றியுள்ளவனாக இரு என்று அறிவுரை கூறினாள். ஆம், பிரியமானவர்களே, நாமும் நம்முடைய பரம தந்தையாகிய தேவா னாகிய கர்த்தரை நோக்கி அநேக வேண்டுதல்களை ஏறெடுக்கின்றோம். அந்த வேண்டுதல்கள் யாவும் நம்முடைய அறிவுக்கு எட்டியபடியானதா கவே உள்ளது. அவை இன்ன பிரகாரமாக நிறைவேற வேண்டும் என்ற திட்டமும் மனதிலே தோன்றுகின்றது. ஆனால் சில வேளைகளிலே, அந்த வேண்டுதல்களில் சில நமக்கு கிடைக்காதிருக்கும் போது, நாம் ஏமாற்றமடைந்தவர்களைப் போல, கசப்படைந்து, முறுமுறுக்க ஆரம்பி த்து விடுகின்றோம். அப்படிப்பட்ட சிந்தை தேவ பிள்ளைகளாகிய நம க்கு ஏற்புடையதல்ல. கசப்புக்களும், நன்றியற்ற தன்மைகளுமல்ல, தேவ சமாதானமே நம்முடைய சிந்தையை ஆட்கொண்டிருக்க வேண்டும். நீங்கள் உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெப த்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். விசு வாசத்தோடு பொறுமையாயிருங்கள். பெற்ற நன்மைகளைக் குறித்து சாட்சி கூறுங்கள். அப்பொழுது தேவ சமாதானம் உங்கள் இருதயங் களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

ஜெபம்:

என்னைப் பெலப்படுத்துகின்ற என் தேவனாகிய கர்த்தாவே, நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கவும், நன்றியுள்ள உள்ளம் கொண்டவனாக வாழவும் எனக்கு கற்றுத் தருவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலி 4:4-6