தியானம் (மார்கழி 26, 2022)
திருநாட்களின் மையப்பொருள்
1 பேதுரு 1:15
உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கை களெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்
வர்த்தகமயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த உலகத்திலே, மனித ர்கள் பல கால எல்லைகளை கடந்து வந்திருக்கின்றார்கள். அவையா வன: தன்நிறைவின் காலம், பண்டமாற்று காலம், நாணய பெறுமதி அடி படையில் ஆரம்பித்த வர்த்தகத்தின் காலம். இன்று கடன்அட்டைகளை பயன்படுத்தி இன்ரநெற் ஊடகங்கள் வழியாக வீட்டிலிருந்து கொண்டே மனிதர்கள் வியாபாரத்தை செய்து வருகின்றார்கள். மனித அறிவின் வள ர்ச்சி பெருகியிருக்கும் காலத்திலே, ஏறத்தாழ மனிதனுடைய வாழ்க்கை எல்லாப் பகுதியுமே வர்த்தகமயமா க்கப்பட்டிருக்கின்றது. விற்பது, வாங் குவது, முதலீடு செய்வது, சேர்த்து வைப்பது போன்றவை வாழ்க்கையின் பிரதானமான நோக்கமாக மாறிக் கொண்டிருக்கின்றது. மனிதர்கள்;, தங்கள் மனதின் ஆசை இச்சைகளை நிறைவேற்றுவதற்கு, கிறிஸ்தவ பெரு நாட்களையும் பொருளாசையை நிறைவேற்ற வர்த்தக நாட்களாக பயன்படுத்துகின்றார்கள். எடுத்துக்கா ட்டாக, நம்முடைய கர்த்தர் இந்த பூமிக்கு வந்த நாளை நினை வுகூர்ந்து கிறிஸ்மஸ் நாளாக நாம் கொண்டாடுகின்றோம். இன்று பரவலாக உல கம் அதை எப்படி கொண்டாடுகின்றது? புத்தாடைகளை வாங்க வேண் டும், கிறிஸ்மஸ் மரத்தை வாங்கி, அதை அலங்கரிக்க வேண்டும். உண வுப் பண்டங்களையும், சிற்றுண்டி களையும் செய்ய வேண்டும். கிறிஸ் மஸ் தாத்தா வர வேண்டும். ஒரு வருக்கு ஒருவர் பரிசுப் பொருட்களை கொடுக்க வேண்டும். விடுமுறை உல்லாசப்பயணம் செல்ல வேண்டும். இன்னும் சிலர் குடித்து வெறித்து, ஆடிப்பாடி களித்திருக்க வேண்டு மென விரும்புகின்றார்கள். இவை யாவற்றிலும் மீட்பர் இயேசு எங்கே இருக்கின்றார்? ஆண்டவர் இயேசு இந்தப் பூமிக்கு வந்ததன் நோக்கம் என்ன? இந்த நாட்களிலே நாம் பற்பல காரியங்களை செய்கின்ற வேளை யிலே, இழந்து போனதை தேடவும் இரட்சிக்கவும் வந்த மீட்பராகிய இயே சுவின் முதலாம் வரு கையை, மறுபடியும் இழந்து போகப்பண்ணும் இந்த உலக காரியங்களினாலே நாம் கொண்டாடுவது எப்படி? நாம் பெற்றுக் கொண்ட மீட்பின் ஆனந்த தொனியும், தொலைந்து போன வர்களை விடுதலையாக்கும் மீட்பின் நற்செய்தியுமே இந்நாட்களில் நம் கொண்டாட்டங்களின் மையப்பொருளாக இருக்க வேண்டும். எனவே கிறிஸ்மஸ் நாட்களை வர்த்தக மயமாக்காதபடிக்கும், வர்த்தகமாயமா க்கின்றவர்களுக்கு இடம் கொடுக்காதபடிக்கும், பரிசுத்த அலங்கார த்தோடு கர்த்தருடைய நாட்களை விசேஷpத்து கொண்டாடுவோமாக.
ஜெபம்:
விலை மதிக்கமுடியாத இரட்சிப்பை எனக்கு தந்த தேவனே, நான் தெளிந்த புத்தியுள்ளவனாகயிருந்து, மறுபடியும் இந்த உலக மாயைக்குள் சிக்கிக் கொள்ளாதபடிக்கு என்னைக் காத்துக் கொள்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - லூக்கா 19:10