புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 25, 2022)

வெளிச்சம் பிரகாசித்தது

ஏசாயா 9:2

இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர் களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.


ஆண்டாண்டு காலமாய் இரட்சகர் வர காத்திருந்த ஜனங்கள் மேய்ப்பனி ல்லாத ஆடுகளைப் போல வழிதவறிப்போனார்கள். சிலர் பாவிகளும், துரோகிகளும் என்று சமுதாயத்தினாலே புறம்;பாக்கப்பட்டார்கள். அவர் கள் உண்மையிலே பாவிகளும் துரோகிகளுமாக இருந்தாலும், அவர்க ளுக்கு இனி யார் வாழ்வு கொடுப்பார்கள்? வேறு சிலர், தாங்கள் பக்தி வைராக்கிமுள்ளவர்கள் என்று தங் களையே மேன்மை பாராட்டி, பெரு மையின் கண்ணிக்குள் சிக்கியிருந் தார்கள். இவர்கள் தாங்கள் அகப்ப ட்டிருக்கும் பரிதாப நிலைமையை தங்களால் உணரமுடியாமல், இவ ர்களுடைய மனக்கண்கள் குருடுப ட்டிருந்தது. அந்தகார இருளிலிரு ந்து யார் இவர்களை விடுதலை யாக்குவார்? இன்னும் சிலர் தங்க ளுக்கென தெய்வ ங்களை உருவாக்கிக் கொண்டு, விக்கிரகங்களுக்கு அடிமைகளாகிக் கொண்டார்கள். விக்கிரக ஆராதனை பிடியிலிருந்து விடுதலை தரக்கூடியவர் யார்? இப்படியாக மனிதர்கள் யாவரும், ஏதோ ஒரு வகையிலே அடிமைத்தனத்துக்குள் சிக்கியிருந்தார்கள். தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோக த்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார். அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை (சங் 53:2-3) என்ற வேதவாக்கியத்தின்படி எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களானார்கள். ஆனா லும், வாக்கு மாறாத தேவன், தாம் வாக்களித்த மெசியாவை இந்த உல கத்திற்கு அனுப்பினார். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். வாக்களிக்கப்பட்ட மீட்பராகிய இயேசு உலகத்திலே வந்துதித்த நாளை இன்று நாம் நினைவுகூருகின்றோம். வார்த்தையா கிய இயேசு மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினா லும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; என்பதை அறி க்கையிடுறோம். அன்று மட்டுமல்ல, இன்றும் என்றும், அவரை தங்க ளுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளுகின்றவர்கள், இருளான வாழ்க்கையிலிருந்து ஆச்சரியமான தேவ ஒளியை கண்டடைகின்றா ர்கள். எல்லா அடிமைத்தன கட்டுக்களிலுமிருந்து அவர் உங்களை விடுத லையாக்கி நடத்திச் செல்வார்.

ஜெபம்:

பரலோக தந்தையாகிய தேவனே, உம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவை நீங்கள் எங்களுக்காக தந்தமைக்காக உமக்கு நன்றி. என் வாழ்வில் இருக்கும் குறைகள் யாவையும் நீர் நிறைவாக்கி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:9