புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 24, 2022)

தேவனுக்கு அடிமையாயிருங்கள்

ரோமர் 6:22

இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.


ஐயா போதகர் அவர்களே, அடிமைத்தன கட்டுகளிலிருந்து விடுதலை யாக வேண்டும் என்று பிரசங்கத்தீர்கள், முடிவிலே தேவனுக்கு அடிமை களாக இருங்கள் என்று பிரசங்கத்தை முடித்தீர்கள் தேவனுக்கு அடிமை யாக இருப்பதென்பது எனக்கு புரியவில்லை என்று ஒரு புது விசுவாசி யானவன், தன் போதகரிடம் கூறினான். அதற்கு போதகர்: மகனே, இந்த உலகிலே ஒரு மனிதனுடைய வாழ் விலே அவனுக்கு கிடைக்கக் கூடிய பெரிதான வெற்றி என்ன என்பதை நீ சிந்தி த்ததுண்டா? நீ உன் பிதாவாகிய தேவனு டைய சித்தத்தை உன் வாழ்வில் நிறைவேற்றி முடிப்பதே பெரி தான வெற்றி. மனிதர்களோ சமா தானம், நிம்மதி, மனத்திருப் தியை தேடி ஓடிக் கொண்டே இரு க்கின்றார்கள். கல்வியை கற்று முடிக்க வேண்டும் என்று பிரயாசப்படு கின்றவன், அதில் வெற்றி கண்டபின்பு, அத்தோடு நிறுத்திவிடுவதி ல்லை. வேலை, பணம், பதவியுயர்வு என்று வாழ்நாள் முழுவதுமே ஓடுகின்றான். பின்பு, திருமணமாக வேண்டும், பிள்ளை பெற்று வளர்க்க வேண்டும். பின்பு பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்று மறுபடியும் பிரயாசப்படுகின்றான். இந்த பயணங்களுக்கோ முடிவும் இல்லை. மனி தனுடைய ஆத்துமாவானது இவைகளினால் திருப்தியாவதுமில்லை. ஆனால், மனித னாவன், தன் வாழ்வை மனப்பூர்வமாக, தேவனுடைய சித்தம் நிறை வேற இடங் கொடுக்கும் போது, அங்கே அவன் பெரிதான வெற் றியையும், ஆன்மீக திருப்த்தியையும், முடிவிலே நித்திய ஜீவ னையும் பெற்றுக் கொள்கின்றான். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், இஸ்ரவேல் தேசத்திலே, நாசரேத் என்னும் ஊரிலே, மரியாள் என் னும் ஒரு எளிமையான கன் னிகை வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் தேவ தூதன் அவளுக்கு தேவ செய்தியை கொண்டு வந்தான். நீ கர்ப்பவதி யாகி ஒரு குமாரனை பெறுவாய் அவரே இந்த உலகத்திற்கு மீட்பராக இருப்பார் என்று கூறினான். மரியாளோ, தேவனுடைய சித்தம் தன்னில் நிறைவேற இடம் கொடுத்து, இதோ, நான் தேவனுடைய அடிமை அவ ருடைய சித்தப்படி எனக்கு ஆகக்கடவது என்று நிபந்தனையின்றி தன்னை தேவனிடம் ஒப்புக் கொடுத்தாள். தன்னைத் தாழ்ததியதினிமி த்தம் அவள் கர்த்தருடைய தாய் என்று அழைக்க ப்படும் பாக்கியத்தை பெற் றாள். இரட்சணியமானது இந்த பூவுலகில் தோன்றும் தேவ பாத்தி ரமாக மாறினாள். இதுவே தேவனுக்கு அடிமையாய் இருப்பதன் மேன்மை என்று போதகர் விளக்கிக் கூறினார்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்காக என்னை அழைத்த தேவனே, மனப்பூர்வமாக நான் உம்முடைய சித்தத்தை என் வாழ்வில் நிறைவேற்றி முடிக்க எனக்கு பெலன் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 1:38