புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 23, 2022)

யார் உங்களுடைய நட்சத்திரம்

வெளிப்படுத்தல் 22:16

ஆண்டவராகிய இயேசு: நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.


இன்றைய உலகிலே சில மனிதர்கள் திரையுலக நட்சத்திரங்களையும், வேறு சிலர் விளையாட்டுத்துறை நட்சத்திரங்களையும், இன்னும் சிலர் உலக பாடல்களைப் பாடும் சிறப்பு நட்சத்திரங்களின் (Superstars) விசிரி களாக தங்கள் வாழ்க்கையை அர்பணித்து வாழ்ந்து கொண்டிருக்கின் றார்கள். தங்கள் நட்சத்திரங்கள் செல்லும் இடமெல்லாம் இவர்களும் அவர்களை பின்தொடருவார்கள் (Follow). அவர்கள் செய்யும் செயல்கள் யாவற்றிற்கும் தங்கள் விருப்பங் களை தெரிவித்துக் கொள்வார்கள் (Like). அதிகப்படியான நேரத்தை தாங் கள் விரும்பும் உலக நட்சத்திரங்க ளின் செயல்களை பார்க்க செலவி டுகின்றார்கள். இந்த உலக நட்ச த்தி ரங்கள்ரசிகர்களின் இருதயங் களி லே பெருமிடத்தை வகித்து வருகின்றார்கள். ஆதலால், அந்த நட்சத்தி ரங்கள் இவர்களின் வாழ்க்கையை ஆளுகின்றார்கள் என்று கூறுவதும் மிகவும் பொருத்தமாக இருக்கும். இவை சரியா? பிழையா? இவர்களை பின்பற்றுகின்றவர்களின் முடிவு எப்படியாயிருக்கும் என்பதை நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். நான் ஒரு விடி வெள்ளி நட்சத்திரத்தை அறிந்திருக்கின்றேன். அவர் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கின் றார். நான் அவரை அறியாமல் தாழ்விடங்களிலே இருந்த நாட்களிலே, அவர் உன்னத்திலிருந்து இற ங்கி, பாவியாயிருந்த என்னை தேடி வந்து, என்னை அடிமைத்தனங்க ளிலிருந்து நீங்களாக்கி, என்னை தேவனுடைய பிள்ளையாக மாற்றி, நானும் தம்மைப் போல மகிமையின் சாயலை அடைய வேண்டும் என்று விருப்பமுள்ளவராக இருக்கின்றார். இதோ, உலகத்தின் முடி வுபரிய ந்ததும் நான் உங்களோடு இருக்கி ன்றேன் என்று எம்; கூட அவர் இருக் கின்றவராக இருக்கின்றார். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக் கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன் என்று கூறி பரலோகம் சென்றவர், எனக்காக தினமும் பரிந்து பேசுகின்றவராக இருக்கின்றார். அவரே என்னுடைய மீட்பரும், இரட்சகரும், கர்த்தரும், என் ஆத்தும நேசருமாயிருக்கின்றார். இவரே வழியும் சத்தயமும் ஜீவனுமாயிருக்கின்றார். வாழ்வு தரும் வசனம் இவரிடமே உண்டு. இந்த பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரத்தை பின்பற்றுகின்றவர்களின்; முடிவு நித்திய ஜீவன். இந்த உன்னதமான விலை மதிக்கமுடியாத பாக்கியத்தை நான் இலவசமாக பெற்றுக் கொண்டேன். அவரே ஜீவனின் அதிபதி.

ஜெபம்:

தாயின் கருவில் என்னை தெரிந்து கொண்ட தேவனே, இந்த உலகத்தின் பின்சென்று நான் என் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளா தபடிக்கு, நித்தியராகிய உம்மை பின்பற்றி செல்ல கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 15:16