புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 22, 2022)

மனதின் மாற்றங்கள்

கொலோசெயர் 3:13

ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த தம்பதியினருக்கு, தங்கள் அயலில் வசித்து வந்த சில உறவுகளோடு மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டது. அந்த தம்ப தியினர், அயலிலுள்ள உறவுகளின் சில தகாத வார்த்தைப் பிரயோகங் களால் மனதிN குத்துண்டு, காயப்பட்டார்கள். இதினிமித்தம் ஒரு கசப் பான வித்து அவர்கள் மனதிலே விழுந்து விட்டது. இந்த சூழ்நிலை யைப் எப்படி வெற்றி கொள்வது என்று பல நாட்கள் அவர்கள் சிந்தி த்தார்கள். சில மாதங்களுக்கு பின் னர், வாடகைக்கு இருந்த தங்கள் வீட்டை விட்டு விட்டு, தூரத்திலுள்ள தேசத்திற்கு இடம் பெயர்ந்து, அங் கே புதிய வாழ்க்கையை ஆரம்பித் தார்கள். புதிய நண்பர்கள், புதிய உற வுகள், புதிய வேலை, புதிய வீடு, புத்ததுணர்ச்சி தரும் புதிய சமுகம் ஆனாலும்; அவர்கள் இருதயமோ காயப்பட்ட பழைய இருதயமாகவே இருந்தது. நடந்த சம்பவங்களை மறக்க பல யதார்த்தமான முயற்சிகளை அவர்கள் எடுத்த போதும், மனதிலே விழுந்த கசப்பின் விதையானது வளர்ந்து கொண்டே இருந் தது. வெளிப்பிரகாரமாக தங்களுக்கு வெற்றி என்று காண்பித்த போதும், அவர்கள் மனதிலே வேதனைகள் பெருகிற்று. இப் படியாக மனிதர்கள் தங்கள் தங்கள் மனதின் வேதனைகளை தீர்த்துக் கொள்ள பல நல்ல முயற்சிகளை எடுக்கின்றார்கள். அவைகளிலே பலன் உண்டு. ஆனால், முழுiமையான வெற்றியோ அவர்களுக்கு கிடைப்பதில்லை. அந்தத் தம்பதியினர், தங்கள் வாழ்வில் பல தியாகங்களை செய்து, பல காரிய ங்களை மாற்றினார்கள். அதற்கு கிரயம் கொடுத்தார்கள். ஆனால், முத ன்மையாக மாற்றம் வேண்டிய அவர்களது இருதயத்திலே எந்த மாறு தலும் இல்லை. இவை மனிதர்கள் கையாளும் மாம்சத்தின் போராயுத ங்கள். எண்ணங்கள் நன்மையானதாக இருந்தாலும், அவைகளினாலே மனதிலே சுகம் ஏற்படுவதில்லை. சத்திய வேதத்தின் வார்த்தைகளே எமது அகத்திலே சுகம் தரும் அருமருந்தாக இருக்கின்றது. மற்றவர் களுக்கு மன்னிப்பை கொடுப்பதிலும், மற்றவர்களிடமிருந்து மன்னிப்பை கேட்டு பெற்றுக் கொள்வதும் அவசியமானது. கசப்பான வேர் முளைப்பதற்கு முன்னரே, தீமை செய்தோரை ஆசீர்வ தியுங்கள். கிறிஸ்துவைப் போல நன்மை செய்து பாடநுபவிப்பதன் மேன்மைன அறிந்து கொள்ளுங்கள். இந்த வழியூடாக நாம் பரன் இயேசுவின் சாயலிலே வளர்ந்து பெருகலாம். க்கிறேன் ஆமென்.

ஜெபம்:

தேவ சாயலிலே வளரும்படிக்காய் என்னை அழைத்த தேவனே, எனக்கெதிராக வரும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நான் கிறிஸ்துவின் சாயலிலே வளரும்படிக்கு என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:32