புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 21, 2022)

மாம்ச பெலவீனங்களோடுள்ள போராட்டம்

கலாத்தியர் 5:16

ஆவிக்கேற்றபடி நடந்து கொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறை வேற்றாதிருப்பீர்கள்


மீட்பராகிய இயேசு கிறிஸ்து வழியாக உண்டான இரட்சிப்பை பெற்று வருடங்கள் கடந்து சென்றபின்பும், மாம்சத்தின் எண்ணங்களோடும், கிரியைகளோடுமுள்ள போராட்டத்திற்கு முடிவில்லாமல் இருக்கின்றதே. நான் எவ்வளவு முயற்சி செய்தாலும், பல யுக்திகளை கையாண்டாலும், இவைகளை ஜெயிப்பது மிகமிகக் கடினமாக இருக்கின்றதே என்று ஒரு வாலிபனானவன் சபையின் மூத்த உறுப்பினரொருவரோடு தன் ஆவிக் குரிய வாழ்வின் நிலைமையைக் குறி த்த மனஉளைச்சலைக் கூறினான். அந்த வாலிபனானவனுடைய வாழ்க் கையிலே உண்மைத்துவம் இருந் தது. அவன் இரண்டு காரியங்களை செய்தான். முதலாவதாக: தனக்கு மாம்ச பெலவீனங்களோடு போரா ட்டம் உண்டு என்பதையும், அதை மேற்கொள்ளும்படியாக தான் முய ற்சிகளை எடுத்திருக்கிறேன் என்பதையும், தன் முயற்சிகளினாலே வந்த பலன் அற்பமானது என்பதையும் ஏற்றுக் அவன் கொண்டான். இரண் டவதாக: தான் அந்த மாம்ச இச்சைகளை ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணமுடையவனாயிருந்தான். அதற்காக உதவியை நாடிச் செல்லும் விசுவாசியாக இருந்தான். ஆம் பிரியமானவர்களே, மாம்சத்தோடும் இர த்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரப ஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. (எபேசியர் 6:12). அதை நாம் தவிர்த்துக் கொள்ள முடியாது ஆனால் நாம் அவற்றை நிச்சயமாக ஜெயம் கொள்ள முடியும். பொதுவாக மனிதர்கள் மாசம்சத்தின் கிரியைகளை ஜெயிக்கும்படி அந்த கிரியை களோடு மாம்ச பிரகாரமாக எதிர்த்து போராடுகின்றார்கள். ஒரு சிலர், அதை மேற்கொள்ள மாம்சத்திலே மாற்று வழிகளை தேடுகின்றார்கள். வேறுசிலர், போராட்டத்தை தவிர்த்துக் கொள்ள முயல்கின்றார்கள். ஆனால், நம்முடைய போராயுதங்கள் நம்முடைய மாம்சபெலன் அல்ல. மாசம்ச எண்ணங்களை, இந்த உலகத்தால் உண்டான மாம்சத்தின்; வழிமுறை களால் ஜெயிக்க முடியாது. மாம்சத்தின் பெலவீனத்தை பற்றியே சிந்தித்துக் கொண்டு, அதைக் குறித்து நொந்து கொண்டிராமல், ஆவியின் பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். அப்போது மாம்சத்தின் இச்சையை நீங்கள் மேற்கொள்வீர்கள்.

ஜெபம்:

சத்துவம் இல்லாதவனுக்கு சத்துவத்தை பெருகப் பண்ணும் தேவனே, என் சுயபெலத்தில் சாராமல், உம்முடைய வார்த்தையை என் இருயத்திலே காத்துக் கொள்ளும்படிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபே 6:13-18