புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 19, 2022)

கர்த்தர் நம் அரணானவர்

1 யோவான் 5:3

அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.


ஒரு தோட்டத்து சொந்தக்காரன், தோட்டத்தை பண்படுத்தி, அதிலே திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணினான். அவன் தன் தோட்ட த்தை சுற்றி பாதுகாப்பான வேலியடைத்து, அதை நன்றாக பரா மரித்து வந்தான். ஆனாலும் அவனுடைய குமாரர்கள், மாலை நேரங்களிலே, தங்கள் தோட்டத்தின் பின்புறமாகவு ள்ள வயல்பகுதிக்கும் சென்று விளை யாடுவது வழக்கமாக இருந்தது. அவர்கள் தங்கள் வசதி க்காக, அவர்களுடைய தகப்பனானவர் திராட்சைத் தோட்டத்திற்கு போட்ட பாதுகாப்பான வேலியின் ஒரு சிறு பகுதியைப் பிரித்து, அவர்கள் வயல்பகுதிக்கு சென்று வருவதற்காக ஒரு சிறு வாசலை ஏற்படுத்தி, அதற்கு கதவை போட்டிருந்தார்கள். ஒருநாள் அவர் கள் அந்தக் கதவை பூட்டிவிடுவதற்கு மறந்து போய்விட்டார்கள். இதினிமித்தம் அன்றிரவு, அந்த பகுதியிலுள்ள, சிறுநரிகள் திரா ட்சை தோட்டத்திற்குள் புகுந்து, செழிப்பாக வளர்ந்து வந்த செடி களின் வேர்களை நறுக்கிக் போட்டது. நாளடைவிலே, தோட்டத் திலிருந்த அநேக செடிகள் பட்டுப்போனதால், அந்தத் தோட்டச் சொந்தக்காரன் பெரும் நஷ்டமடைந்தான். பிரியமானவர்களே, அந்தச் தோட்டச் சொந்தக்காரனைப் போல, தேவனாகிய கர்த்தரும் தம்முடையவர்களை சுற்றி பாதுகாப்பின் வேலியை அடைத்து வைத்திருக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்களா? யோபு என்று பக்தன், உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல் லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். தேவனானவர், அவனை யும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைத்திருந்தார். யோபு, தேவனுக்கு பயந்திருந்தான் என்ப தன் பொருள் என்ன? தேவனானவர் விளம்பிய வேதத்தின் வழியிலே பயபக்தியுடன் தன் வாழ்க்கையை அவன் காத்துக் கொண் டான். ஆனால், சில தேவபிள்ளைகளோ, தேவன் தங்களை சுற்றி அடைத்திருக்கும் வேலியை, தமகுண்டான சிறைவாழ்வு என்று எண்ணிக் கொள்கின்றார்கள். நீங்கள் அவ்வண்ணமாக எண்ணிக் கொள்ளாமல், உன்னதமானவருடைய மறைவிலே தங்கியிருங்கள்.

ஜெபம்:

என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிற கர்த்தாவே, நான் எப்போதும் உம்முடைய கட்டளைகளின் வழியிலே என் வாழ்வை காத்துக் கொள்ளும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - உன்னதப்பாட்டு 2:15