புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 18, 2022)

நீங்கள் யாரால் உண்டானவர்கள்?

1 யோவான் 4:6

நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்;


நீ ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்து வருகின்றாய். கடவுள் என்று மாத்திரம் இருந்தால் போதாது. மனிதனுடைய ஆக்கங்களை நீ ஆராய்ந்து பார். விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியை பற்றி அறி ந்து கொள். உலக சரித்திரத்திலே முன்பொருபோதும் இல்லாத படிக்கு மனிதனுடைய வாழ்க்கையானது அதிகதிகமாக முன்னே ற்றமடைந்திருக்கின்றது என்று ஒரு மனிதனானவன், கர்த்தருக்கு பயந்து அவருடைய வழி யிலே வாழும் ஒரு விசுவாசிக்கு கூறி னான். அந்த மனிதனானவனு டைய பேச்சில் பரிகாசமும் ஏள னமும் சேர்ந்திருந்தது. அதற்கு அந்த விசுவாசியானவன், அந்த மனிதனாவனை நோக்கி: நீ கூறுகின்ற வட்டம், கர்த்தர் என்னை சுற்றி போட்டிருக்கும் வேலியாக இருந்தால், நான் அந்த வட்டத்தி ற்குள் எந்த தயக்கமுமின்று தங்கியிருப்பதையே விரும்புகின் றேன். மனிதனுக்கு செம்மையாகதோன்றுகின்ற அநேக வழிகள் உண்டு. அவை தற்போது பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளி விக்கிறதுமாகவே இருக்கும். காலம் அதன் முடிவை தெரிவிக்கும் என்று தயவோடு அவனுக்கு பதிலளித்தான். பிரியமான சகோதர சகோதரிகளே, நீங்கள் உலகத்தாராயி ருந்தால், உலகம் தன்னு டையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினா லும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினா லும், உலகம் உங்களைப் பகைக்கிறது என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார் (யோவான் 15:18-19). உலகத்துக்குரியவர்கள் தாங்கள் அறிந்திருக்கும் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும். அவைகள் அநித்தியமானவைகள் என்று உணரமுடியாமல், அவர்கள் மனக்கண்கள் குருடாக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் நம்மை பகைக்கின்ற போதும், நாம் அவர்களை வெறுத்து தள்ளிவிடமுடியாது. நாமும் முற்காலங்களிலே அறியாமையிலே வாழ்ந்த நாட்கள் இருந்தது. அவர்களுடைய மனக்கண்கள் திறக்கப்பட வேண்டுமென்று நாம் அவர்களுக்காக ஊகத்தோடு ஜெபம் செய்ய வேண்டும்.

ஜெபம்:

நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கின்றீர்கள் என்று சொன்ன கர்த்தாவே, அறியாமையிலே மூழ்கியிருக்கும் ஜனங்களுக்கு நான் வெளிச்சமாகயிருக்க என்னை நீர் வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 15:18-19