புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 17, 2022)

பிரமாணங்களை காத்துக் கொள்ளுங்கள்

சங்கீதம் 119:5

உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும்.


ஒரு பண்ணையின் உரிமையாளர், தன் மகனானவனை அழைத்து, அடுத்த ஊருக்கு சென்று இந்த கடிதத்தை இன்னாரிடம் கொடுத்து விடு. இது பண்ணையின் வியாபார விவகாரம் சம்மந்தமா னது. வழியிலே கள்வர் இருப்பதால், வேறு எந்த அலுவல்களிலும் ஈடுபடாமல், மாலையிலே பொழுப டுமுன் வீட்டிற்கு திரும்பி விடு என்று அவனை எச்சரித்து, அவனை வழி யனுப்பி வைத்தார்;. காலையிலே கால்நடையாக குறிப்பிட்ட அந்த ஊருக்கு செல்ல ஆரம்பித்தவன், மதிய வேளையிலே அங்கே சென்று குறித்த நபரிடம் கடிதத்தை கொடுத்து, அதற்காக பதிலையும் பெற் றுக் கொண்டு, திரும்பி தன் ஊரை நோக்கி வந்து கொண்டிரு ந்தான். வருகின்ற வழியிலே, பார்வைக்கு மிகவும் அழகான பூச் சாடிகளை பாதையருகில் சிலர் விற்றுக் கொண்டிருப்தைக் கண்டு, அதிலொன்றை எடுத்துச் செல்வோம் என்று தீர்மானித்தான். இதி னிமித்தம் அவனுடைய நேரம் அங்கே சற்று விரயமாயிற்று. பின் னர், அவன் கொண்டு சென்ற பையோடு, இந்தச் சாடியையும் சும ந்து கொண்டு சென்றதால், அவன் பயணம் ஸ்தம்பிதமாயிற்று. அதனால், ஊருக்கு திரும்புவதற்கு முன்னதாக இருட்டிவிட்டது. தெருவிலே மினவிளக்குகள் எதுவுமில்லை. செல்லும் பாதையிலே யாருமில்லை. பயம் அவனை ஆட்கொண்டது. தன் தந்தையார் சொன்ன அறிவுரையை அவன் கேளாது போனதால், தான் ஆபத் திற்குள்ளாக்கிக் கொண்டேன் என்று உணர்ந்து கொண்டான். பிரி யமானவர்களே, இவ்வண்ணமாகவே, நம்முடைய பரலோகத்தை நோக்கிய ஜீவயாத்திரையின் வழியிலே, நாமும் சிலவேளைக ளிலே, தேவ வார்த்தையை அலட்சியம் செய்வதால், போகும் வழி யிலே, நம் கண்களுக்கு அழகாய் தோன்றும், சில பாரங்களை நம்மேல் ஏற்றிக் கொள்கின்றோம். அவை இந்த உலகில் நன்மை யாக தோன்றும் காரியங்களாக இருக்கலாம். ஆனால், வேதம் கூறும் எச்சரிப்பை நாம் ஒருபோதும் அசட்டை பண்ணக்கூடாது. பிசாசானவனின் தந்திரத்திற்குள் நாம் விழுந்துவிடாதபடிக்கு, வேத த்தின் வெளிச்சத்தில் நாம் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, நான் உம்முடைய வேதத்தை பற்றிக் கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் காத்துக் கொள்ள எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதி 1:33