புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 16, 2022)

நமக்கெதிரான உபாயங்கள்

ரோமர் 8:15

அந்தப்படி, திரும்பவும் பயப் படுகிறதற்கு நீங்கள் அடிமை த்தனத்தின் ஆவியைப் பெறா மல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.


பிரியமான சகோதர சகோதரிகளே, நீங்கள் பிசாசானவனின் தந்திரங் களுக்கு பயப்படுகின்றீர்களா? அல்லது அவனுடைய ஆளுகைக்கு உட் பட்டிருக்கும் உலக போக்குகளை கண்டு கலக்கமடைகின்றீர்களா? திவ்விய ஒளியைப் பெற்ற தேவ பிள்ளைகளே, இருளின் அதிகாரத்தை கண்டு பயப்படாமலும், கலங்காம லும் இருங்கள். உலகத்தை ஜெயி த்த ஆண்டவர் இயேசுவின் ஆவி நம்மில் வாசமாயிருக்கின்றது. அத னால் பிசாசானவனும், அவனு டையவர்களும் நம்மைக் குறித்து பயமுள்ளவர்களாக இருக்கின்றா ர்கள். இஸ்ரவேல் ஜனங்கள் நம் மிலும் ஏராளமானவர்களும், பலத் தவர்களுமாய் இருக்கிறார்கள் என் றும் அவர்கள் பெருகாதபடிக்கும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்க ளும் நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்ப ண்ணி, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகாதபடிக்கும், நாம் அவர்களை க்குறித்து ஒரு உபாயம் பண்ணவேண்டும் என்று அக்காலத்திலே வல்ல மைமிக்க ராஜா என்று கருதப்பட்ட பார்வோன் பயந்தான். அதனால், இஸ் ரவேலரை எப்படியாவது அடிமைத்தனத்திற்குள், உட்படுத்த வேண்டும் என்று கடும் முயற்;சி செய்தான். அதுபோலவே, தேவனுடைய பிள்ளை களாகிய நாமும் தேவனை அறிகின்ற அறிவில் வளர்ந்து பெருகி, அவரு க்கு சாட்சியாக வாழ்வதை எப்படியாவது தடுத்து நிறுத்தி, நம்மை அடிமைத்தன நுகத்திற்குள் எப்படியாவது தந்திரமாக நுழையப் பண்ண வேண்டும் என்று உபாயம் செய்து வருகின்றான். தந்திரம், உபாயம், வஞ்சகம் இவைகளை மாத்திரமே பிசாசானவனால் செய்ய முடியும். இத்த கைய தந்திரங்கள், உபாயங்கள், வஞ்சகங்களை அவன் எப்படி நடப் பிக்க முடியும்? தீமையான வழிக்கு இட்டு செல்பவைகளை எப்படி யாவது நன்மையாக காண்பிக்க வேண்டும். நன்மையான தேவ போத னைகளை எப்படியாகவது தீமையானது என காண்பிக்க வேண்டும். நீங்கள் அந்த வலைக்குள் சிக்கிக் கொள்ளாதபடிக்கு, தேவனுடைய வாழ்வு தரும் வசனத்தை தினமும் வாசித்து, தியானியுங்கள். அனுதி னமும் ஜெபம் செய்வதை எக்காரணம் கொண்டும் நிறுத்திவிடாதிரு ங்கள். பயப்படாமல், விசுவாசத்தில் நிலைத்திருந்து, விழிந்திருங்கள் பிசாசானவனுக்கு எதிர்த்து நில்லுங்கள் அவன் உங்களைவிட்டு ஓடிப் போய்விடுவான்.

ஜெபம்:

பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியை எனக்கு தந்த தேவனே, நான் பிசாசாசின் தந்திரங்களுக்கு பயப்படாமல், உம்முடைய திவ்விய வழியிலே நடக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 தீமோ 1:7