புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 15, 2022)

சுய ஞானத்தினால் பைத்தியமானவர்கள்

1 கொரிந்தியர் 1:27

ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்;


சிறிய வயதிலிருந்து தேவனுடைய காரியங்களை அறிந்திருந்த ஒரு மனிதனானவன், உலகத்திலுள்ள மிகவும் பிரபல்யமான ஒரு பல்கலை க்கழகத்திலே பல பட்டங்களை பெற்று, உலக அளவுகோலின்படி கல் விமானாக இருந்த அவன், சிரேஷ்ட பேராசிரியாக கடமையாற்றி வந் தான். பல ஆண்டுகள் கடந்து சென்ற பின்னர், அவன் பிரபல்யமான பல் கலைக்கழகமொன்றில் பெரிதான அதிகாரியாக நியமிக்கப்பட்டான். அவன் தன் நண்பர்களோடு பேசு கையில், கடவுள் நம்பிக்கையெ ன்பது கல்வி கற்காதவர்களுக்கும் அறியாமையிலே வாழ்பவர்களுக் குமுரியது. காரியமறியாத பாமர மக் களும், சமுதாயத்தினால் தாழ்த்த ப்பட்டவர்களும், வேறு வழியறியாததினால் தேவனை பற்றிக் கொள் கின்றார்கள் என்று கூறிக் கொண்டான். தன் சிறு வயதிலே மெய்ஞான த்தை அறிந்திருந்த இந்த மனிதனானவன், உலக ஞானத்திற்கு தன்னை படிப்படியாக ஒப்புக் கொடுத்ததால், தன் இருயத்தை உலக ஞானமா னது மேற்கொள்ளும்படி இடங் கொடுத்தான். ஆண்டவர் இயேசு இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலே, கற்றுத் தேர்ந்த ஞானவான்களும், சிறப்புக் குடிகளாயிருந்த பிரபுக்களும் அவரை புறக்கணித்தார்கள். ஏரோது ராஜா, ஆண்டவர் இயேசு ஏதாவது விநோதமான காரியம் செய் வார் என்று பார்த்திருந்தான். அதிகாரியாகிய பிலாத்து கர்த்தரை கண்டு குழப்பமடைந்தான். இவர்கள் தங்கள் உலக பதவிகளுக்கு அடிமை களாக இருந்தபடியால், திவ்விய ஒளியாகிய இயேசு பரலோகத்திலிரு ந்து வந்தவர் என்பதை அறியாதபடிக்கு தங்கள் கண்களை உலக ஞான த்தால் தாங்களே குருடாக்கிக் கொண்டார்கள். ஆயக்காரரும், பாவிக ளும், ஒடுக்கப்பட்டோரும், வாழ்விழந்தோரும், திக்கற்றவர்களும், வழி யறியாத விதவைகளும், சமுதாயத்தால் தள்ளப்பட்டு தெரு வோரங் களிலே இருந்த ஏழை எளியவர்களும், திவ்விய ஒளியாகிய இயேசு தங்கள் இருதயங்களில் பிரகாசிக்க இடங்கொடுத்தார்கள். தேவ அழை ப்பை பெற்ற சகோதர சகோதரிகளே, உலக ஞானத்தில் தேர்ச்சி பெற்ற அந்த உலக பேராசிரியரை குறித்து ஆச்சரியப்படாதிருங்கள். உலகத்தி னால் உண்டான சுயஞானத்தினாலே தேவனை அறிந்து கொள்ள முடியாது. சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, ஆனால் அதே உபதேசமோ நம்மை நித்திய ஜீவனுக்கென்று அழைத்து செல்கின்றது. உலக ஞானத்திற்கு அடிமையாக உங்களை ஒப்புக் கொடாதிருங்கள்.

ஜெபம்:

எல்லாவற்றையும் அறிந்த தேவனே, இந்த உலகத்தின் ஞானத்தினாலே நான் என்னை பைத்தியமாக்காதபடிக்கு, நீர் தந்திருக்கும் பரத்திலிருந்து வரும் மெய்ஞானத்தை நான் எப்போதும் பற்றிக் கொண்டு வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:25