புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 14, 2022)

நவீன போதனைகள்

1 பேதுரு 5:8

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்;


ஒரு வாலிபனானவன், தான் உயர்கல்வியை கற்கும் நாட்களிலும் கூட ஊக்கமாக தேவனுடைய ஊழியங்களிலே உதவியாக இருந்து வந்தான். அவன் தனது பட்டப்படிப்பை முடித்து பின்னர், வேலைக்காக சில கம் பனிகளுக்கு விண்ணப்பித்திருந்தான். அவனுடைய ஆச்சிரியத்திற்கு, பட்டணத்திலுள்ள ஒரு பிரபல்யமான கம்பனியிலிருந்து அவனுக்கு அழை ப்பு வந்தது. நேர்முகத்தேர்வுக்காக (Interview) அந்த கம்பனியின் இயக்குணரை காணும்படி சென்றிருந்தான். வாலிபனின் திறமைகள் அந்த இயக்குனரை கவர்ந்து கொண்டது. அது, அந்த வாலிபனுக்கும் மனத் திருப்த்தியாக இருந்தது. இறுதி நேர்முகத்தேர்விலே, இயக்குனர், வேலை ஆரம்பிக்கும் நாளை குறிப் பிட முன்பதாக, அந்த வாலிபனை நோக்கி: நாங்கள் சர்வதேசமட்டத்திலே இயங்கி வருகின்றோம். எனவே, ஞாயிற்று கிழமைகளிலும் நீ வேலை செய்ய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் என்று அவர் அவனிடம் கூறினார். அதற்கு அந்த வாலிபனானவன்: எந்த தயக்கமுமில்லாமல், நான் ஒரு கிறிஸ்தவன், ஞாயிறு பிற்பகல் வரைக்கும் என்னால் வேலை செய்ய முடியாது என்று கூறினான். அதற்கு இயக்குனர்: நானும் கிறிஸ்தவன் தான், ஞாயிறு மட்டுமல்ல, எல்லா நாட்களுமதேவன் படைத்த நாட்கள எனவே வேறு நாட்களிலே ஆராதித்தால் ஆண்டவர் கோபித்துக் கொள் ளமா ட்டார் என்றார். இவர் நவீன இறையியலை (Modern Theology) பேசுகின்றார் என்று அறிந்து கொண்ட அந்த வாலிபன் அவரை நோக்கி: சார், நீங்கள் கூறுவது உண்மை ஆனால் வாரத்தின் முதலாம் நாள், வெறும் ஞாயிற்று கிழமை மட்டுமல்ல, அது நம்முடைய கர்த்தர் உயிர் தெழுந்த நாள். அது கர்த்தருடைய நாள். அந்த முதலாம் நாளிலேயே பெந்தேகோஸ்தே நாளன்று பரிசுத்த ஆவியானவரைக்கு றித்த வாக் குத்தத்தம் நிறைவேறிய நாள். வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கு ம்படி சீஷர்கள் கூடிவந்திருந்தார்கள். அவை யாவற்றிற்கும் மேலாக, நான் அந்த நாளை கர்த்தருக்கென்று அர்ப்பணித்திருக்கின்றேன். தேவ னுக்கென்று கொடுத்ததில் மாற்றத்திற்கு இடமில்லை என்று பதில் கூறி, இந்த நவீன உலகம் போகும் அடிமைத்தனத்திற்கு இட்டுச் செல்லும் போக்கிற்கு இடம் கொடாமல், தேவன் தம் பூரண சித்தப்படி தனக்கென வைத்திருக்கும் வேலைக்காக காத்திருக்கும்படி தீர்மானம் செய்து கொண்டான். அருமையான தேவ பிள்ளைகளே, நீங்கள் ஆரம்பத்தில் கொண்டிருந்த வைராக்கியத்தை வஞ்சகமான போதனைகளினாலே மாற் றிக் கொள்ளாதிருங்கள். வஞ்சகமான நவீன போதனைகள் உங்களை படிப்படியாக உலகத்தின் அடிமைத்தனத்திற்குள் தள்ளிவிடும்.

ஜெபம்:

ஜெயம் கொடுக்கும் தேவனே, நான் ஆதியில் கொண்ட விசுவாசத்தில் உறுதியாயிருந்து, பிசாசானவனின் தந்திரங்களுக்கு எதிர்த்து நிற்க என்னை பெலப்படுத்தி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 10:16