புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 13, 2022)

வஞ்சகமான அடிமைத்தனம்

ரோமர் 12:2

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்,


முற்காலங்களிலே, மன்னர்கள் நாடுகளை ஆட்சி செய்த அக்காலங்க ளிலே, புறதேசங்களோடு தாங்கள் யுத்தம் செய்யும் போது, அந்தந்த தேச ங்களிலுள்ள மனிதர்களை கைது செய்து, தங்கள் தேசத்திற்கு கொண்டு வந்து, அவர்களை விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர் களாகவும் அடிமைகளாக ஏற்படுத்தி வந்தார்கள். வேறு சில தேசங்க ளிலே, ராஜாக்களின் அரண்ம னையில் சேவை செய்வதற் காகவும், ராஜாவிற்கு மந்திரிக ளாகவும் கூட சேவைக்கு அம ர்த்தப்பட்டிருந் தார்கள். இவர் களை எந்தவித ஊதியமும் இல்லாமல் ராஜாவின் ஆளுகைக்கு கட்டு ப்பட்டிருப்பதால், இவர்கள் அடிமைகள் என்று அழைக்கப்பட்டார்கள். அடிமைகளை வியாபாரப் பொருளாக சட்டரீதியாக விற்று வாங்கிய அடி மைத்தனத்தின் காலங்களுண்டு. இன்று, இவ்வண்ணமாக மனிதர்கள் மனிதர்களை அடிமைகளாக கொள்வனவு செய்;து அடக்கி ஆளுகை செய் வதை ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் சட்டவிரோதமான செயல் என்று பிரகடனப்படுத்த ப்பட்டிருக்கின்ற வேளையிலும், அடிமைத்தனம் மனித ர்களுடைய வாழ்விலே இடம்பெற்று வருகின்றது. அது எப்படி? சிலர் தங்க ளைத் தாங்களே மனிதர்களுக்கோ, பொருட்களுக்கோ அல்லது உலக ஞானத்திற்கோ அர்ப்பணித்து விடுகின்றார்கள். இப்படியாக மனி தர்கள் துன்மார்கராகவோ, சன்மார்க்கராகவோ இருக்கலாம். உலகத் திலே நன்மையான பொருளாகவோ அல்லது சரீரத்திற்கு தீமையை உண்டுபண்ணும் பொரு ளாகவோ இருக்கலாம். எந்த ஒரு பொருளோ, அதிகாரமோ, ஞானமோ அது ஒரு மனிதனை ஆளுகை செய்யும் போது அவன் அதற்கு அடிமை யாக மாறிவிடுகின்றான். ஆனால் அவன், தான், அடிமைத்தனத்தில் இருக்கின்றேன் என்பதை உணராமலும், அந்த அடி மைத்தனத் தனம் மேன்மையானது என்று தங்கள் வாழ்க்கையில் உயர்த் திவைக்கும்படிக்கு இப்பிரபஞ்சத்தின் அதிபதியானவன் இப்படிப்பட்ட வர்களுடைய மனதைக் குருடாக்கினான். இது உலகத்தின் போக்கு என் பதை அறியாத சில தேவ பிள்ளைகளும், இப்படிப்பட்ட வலைக்குள் சிக்கிக் கொள்ள தங்களை ஒப்புக் கொடுத்துவிடுகின்றார்கள். சர்ப்பமா னது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி வஞ்சக மான அடிமைத்தன உலக போக்கிற்குள் விழுhதபடி உங்கள் இருதய த்;தை எல்லாக் காவலோடும் காத்துக் கொள்ளுங்கள். தேவனுடைய நன் மையும் பிரியமும் பரிபூரண முமான சித்தம் இன்னதென்று பகுத்தறிய த்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

ஜெபம்:

என் நினைவுகளை அறிந்த தேவனே, மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நான் நடவாமலிருக்கும்படி பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபே 4:17-24