புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 12, 2022)

நிலைத்திருந்து கனி கொடுங்கள்

எபேசியர் 4:14

நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்


இந்த ஞாயிறு நான் மூன்று பிரசங்கங்களை இணையத்தளத்திலே கேட் டேன் என்று ஒரு மனிதனானவன், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தான் கேட்ட பிரசங்கங்களின் எண்ணிக்கையை பெருமிதமாக கூறிக் கொண்டான். ஒரு நாள், அவன் இவ்வண்ணமாக, இன்று நான் 5 பிரச ங்கங்களை கேட்டேன் என்று கூறினான். இந்த நிலைமையை அவதா னித்துக் கொண்டிருந்த அவனுடைய வயதான தகப்பனானவர், அவனை அழைத்து மகனே நான் சொல் வதை பணிவுடன் கேள் என்றார். இன்று காலையிலே உன்னுடைய சபையிலே கொடுக்கப்பட்ட தேவ செய்தி என்ன என்றார்? மகனான வன்: அதற்கு மறுமொழி சொல்ல முடியாமல் தடுமாறினான். மேலும் தகப்பனானவர்: முதலாவதாக, உன் சபையின் மேய்ப்பன் வழியாக உன க்கு கொடுக்கப்பட்ட தேவசெய்தி யை கவனமாக கேட்டு, அதன்படி உன் வாழ்;க்கையை மாற்றிக் கொள் என்றார். அதற்கு அவன்: அப்படியானால், மற்ற ஊழியர்கள் தவறாக பிரசங்கம் செய்கின்றார்களா என்று கேட்டான். அதற்கு அவர்: இல்லை, மகனே, உனக்கு ஒரு குடும்பம் உண்டு. உன்னுடைய மகனுக்கு நீ நல்ல தந்தையாக இருக்கின்றாய். உன்னைப் போல அநேக தந்தைமார் இந்த உலகிலே இருக்கின்றார்கள். அவர்களிடமும் நல்ஆலோசனைகள் உண்டு. ஆதலால், உன்னுடைய மகன் நாளுக்கு நாள் வௌ; வேறு தந்தையரு டைய ஆலோசனையை கேட்டு நடப்பது சரியாகுமா? உன்னுடைய மக னைப்பற்றிய பொறுப்பு உன்னிடம் உண்டு. உன்னுடைய மகனுடைய தேவைகளை அறிந்தவன் நீயே. பிள்ளைகளே, பெற்றோருக்கு கீழ்படி ந்திருங்கள் என்று வேதம் கூறுவதைப்போல, அவன் மற்றய பெற்றோரு க்கு அல்ல உனக்கும் உன் மனைவிக்குமே முதலாவதாக கீழ்படிந்து இரு க்க வேண்டும். உலகிலே அநேக நல்ல குடும்பங்கள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றிகும் ஒரு வரையறை உண்டு. ஒழுங்கு முறைகள் உண்டு என்று அந்த அனுபவமிக்க தகப்பனானவர் ஆலோசனை கூறினார். சத் திய வார்த்தையை தூய்மையாக பேசும், ஒரு சபை ஐக்கியத்தில் நீங் கள் இணைந்து கொள்ள நீங்கள் தீர்மானித்த பின்பு, தேவன் உங்களு க்கு தந்த சபை ஒழுங்கு முறைகளுக்கு கட்டுப்பட்டர்களாய் இருங்கள். தேவ அழைப்பை பெற்றவர்களே, பலவித காற்றினாலே அலைகளைப் போல அடிபட்டுஅலைகிறவர்களாயிராமல், நிலைத்திருந்து கனி கொடுங்கள்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, நான் அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நான் நிலைத்திருந்து வளரும்படிக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 1:1-6