புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 11, 2022)

மாற்றங்கள் தேவை!

கலாத்தியர் 5:15

நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீ ர்கள். அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்


ஒரு பண்ணையின் முதலாளிக்கு நான்கு குமாரர்கள் இருந்தார்கள். அவர்கள் வளர்ந்து வாலிப பிரயாத்தையடைந்தது, தமக்குள் ஓய்வில் லாமல், ஒருவரொடொருவர் வாக்குவாதமும் சண்டையும் செய்கின்றவர் களாக இருந்து வந்தார்கள். அவர்களெல்லோரும்யெல்லாம் தங்கள் இஷ; டப்படி பிரச்சனைகளை செய்துவிட்டு, தங்கள் வீடு சண்டை நிறைந்த உலகம் என்றும் இந்த வீட்டில் ஒரு வீதம் கூட நிம்மதி இல்லை என்றும், தகப்பனானவரிடம் முறையீடு செய்து தங்களுக்குள்ளே என்று சத்தம் போட்டுக் கொண்டு வந் தார்கள். ஒருநாள், தகப்பனான வர், வீரியமுள்ள நான்கு புதிய குதிரைகளை வாங்கி, பண் ணையின் ஒரு பகுதியிலே வை த்திருந்தான். அவனுடைய நான்கு குமாரர்களும் பரவசத் துடன் அதை பார்க்கும்படி சென்றிருந்தார்கள். அந்த நான்கு குதி ரைகளும் கட்டுக்கடங்காமல் அங்குமிங்கும் ஒடித்திரிந்தது. குதிரையை அடக்குவதில் அனுபவமிக்க பண்ணையின் தொழிலாளியானவன், அந்த குதி ரைகளை ஒவ்வொன்றாக பணிய வைத்தான். சில கிழமைக்குள் மூன்று குதிரைகள் கட்டுக்கு அடங்கி விட்டது. அப்போது, அவன் குமா ர்களில் மூத்தவன் இப்போது 75 வீதம் அடக்கம் உண்டாயிற்று என்று கூறி னான். ஆனாலும், நான்காவது குதிரையானது, சில மாதங்கள் சென்றும் அடக்கமற்றதாகவே துள்ளித்திரிந்தது. அப்போது அந்த தொழிலாளி யானவன், தன் முதலாளியை பார்த்து: ஐயா, இந்த குதிரையை பணி வான முறையில் அடக்க முடியாது என்றான். அதை கேட்டுக் கொண்டி ருந்த இளைய குமாரன், அப்படியானல் என்ன செய்ய வேண்டும் என் றான். அதற்கு தொழிலாளி: இது கட்டுக்கடங்காத புத்தியில்லாத மிரு கம். வாரினாலும் கடிவாளத்தி னாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, கிட டச் சேராது என்று கூறினான். அப்போது நான்கு குமாரர்களும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். அப் பொழுது தகப்பனானவர் தன் குமாரர்களை பார்த்து: நீங்கள் எந்தக் குதிரையைப் போல இருக்க விரும்புகின்றீர்கள் என்று கேட்டார்? பிரியமான தேவ பிள்ளைகளே, 1. குடும்பத்தில் மாற் றம் வேண்டுமா? சபையிலே மாற்றம் வேண்;டுமா? நீங்கள் மாற்றமடை ந்தால் அந்த இடத்திலே ஒரு குறிப்பிட்ட சதவீதம் நிம்மதி உண்டாகும். 2. மாற்றமடைய மறுக்கின்றீர்களா? வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப் போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம் என்று சத்திய வேதம் அறிவுரை கூறுகின்றது.

ஜெபம்:

மேலானவைகளைத் தேடுங்கள் என்று கூறிய தேவனே, என் மாம்ச இச்சையை நிறைவேற்றாதபடிக்கு, ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்து வழிநடத்திச் செல் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 32:9