புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 10, 2022)

குறைவில்லாத மனிதர்கள்?

எபிரெயர் 12:1

பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு


ஒரு ஊரிலுள்ள சிறு தொழிச்சாலையொன்றிலே பணி புரிந்து வந்த தொழிலாளிகளில் ஒருவன் எப்போதும் குறை கூறுபவனாகவே இருந்து வந்தான். வேலை, சக ஊழியரகள்;, மேற்பார்வையாளர்கள், அல்லது தொழி ற்சாலை இப்படியாக ஒன்றின்பின் ஒன்றாக அவனது முறையீட்டின் பட்டியல் நீண்டு கொண்டே போயிற்று. வேலை செய்யும் நேரத்திலும், தேநீPர் இடைவேளையின் போதும், மதிய நேர உணவு உண்ணும் போது அவனுடைய குறைகூறுதிலினாலே அங்கிருந்த தொழிலாளிகளில் பலர் சலிப்படைந்து போனார்கள். ஒரு நாள் அவனுடைய சக தொழிலாளி யிலொருவன் அவனை நோக்கி: நண்பனே, நீ உன்னுடைய சொந்த தீர்மானத்தின்படி தானே இங்கு வேலை செய்து வருகின்றாய்? இந்த இடத்திலே குறைவுகள் இல்லை என்று நான் கூறவில்லை. அதுபோலவே, நான் முன்பு வேலை பார்த்த கம்பனியிலும் சில குறைவுகள் இருந்தது. நீ குறைகளையே பார்த்துக் கொண்டிருப்பாயானால் இந்தப் பூமியிலே ஒரு இடமும் உன்னால் வேலை செய்ய முடியாது. மற்றவர்களுடைய குறையை கண்டுபிடிப் பதே உன்னுடைய குறையாக மாறிவிட்டது. எல்லோருடைய குறைகளின் தகவல் தொகுப்பு முழுவதையும் நீ உன் மனதில் சுமந்து திரிகின்றாய். நீ உன்னை மாற்றிக் கொள்ள விருப்பம் காட்டாதிருப்பது போலவே மற் றய சில மனிதர்களும் தங்கள் தவறான கொள்கையில் வைராக்கியமாக இருக்கின்றார்கள். நீ இருக்கின்ற இடத்திலே, உன்னை கொஞ்சம் மாற் றிக் கொள். அப்போது உன்னைப் பார்த்து வேறு சிலரும் தங்களை மாற் றிக் கொள்வார்கள் என்று அறிவுரை கூறினான். பிரிய மானவர்களே, இந்த சம்பவத்திற்கொத்ததாக சில மனிதர்களை இன்று தேவ சபைக ளிலும் அங்காங்கே காண்கின்றோம். ஒரு சபை ஐக்கியத்திலே அங்கத் தவராக இருப்பதன் தெரிவானது அவரவருடைய தீர்மானம். குறிப்பிட்ட ஒரு சபை ஐக்கியத்திலே இருக்க தீர்மானம் செய்த பின்பு அந்த தொழி ச்சாலையின் ஊழியனைப் போல குறை கண்டுபிடிப்பதை விட்டுவிடு ங்கள். சபையானது, பரிசுத்தவான்கள் சீர்பொருந்தின இடம் அல்ல, பரிசுத்தவான்கள் சீர்பொருந்துகின்ற இடமாக இருக்கின்றது. ஏனெனில் இந்தப் பூமியிலே வாழும்வரை பாடுகளை தவிர்த்துக் கொள்ள முடியாது. சகிப்புத்தன்மை, மனத்தாழ்மை, நீடிய பொறுமை மற்றும் அர்ப்பணிப்பணிப்போடு தேவனை சேவியுங்கள். நம்முடைய தேவன் தாமே குறைவுகள் யாவையும் நிறைவாக்குவார்.

ஜெபம்:

என்னை நிறைவாக்கும் தேவனே, சூழ்நிலைகளை பார்த்து சோர் ந்து போகாமல், இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே நாம் ஓட உணர்வுள்ள இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - தீத்து 1:15-16

Category Tags: