புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 09, 2022)

நான் யாரை சார்ந்தவன்?

ரோமர் 12:3

உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.


ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலே, மதப் பற்றுள்ள சில சிறப்புக் குழுவினர்களும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் யாரெனில்: சதுசேயர், பரிசேயர், வேதபாரகர் என்ற பிரிவுகளை சேர்ந்த வர்களாக இருந்தார்கள். மதத்தை குறித்து வைராக்கியம் அவர்களிடம் தாராளமாக இருந்தது. இவர்கள் திருநாட்களையும், மத சடங்காச்சாரங்க ளையும் நிறைவேற்றி வந்தார்கள். ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்றும், மோசே தங்கள் வழிகாட்டி என்றும் மேன்மைபாராட்டி வந்தா ர்கள். அவர்களுடைய பரிதாபமான நிலை என்ன என்பதை நீங்கள் சற்று சிந்தியுங்கள். தாங்கள் தேவானா கிய கர்த்தருடையவர்கள் என்று வை ராக்கியம் பாராட்டினார்கள் ஆனால் உண்மையிலே அவர்களில் அநேகர் தேவானாகிய கர்த்தரோடு தொடர் பற்றவர்களாகவே வாழ்ந்து வந்தா ர்கள். தங்களுக்கு வாக்களிக்கப்ப ட்ட மெசியா (மீட்பர்) வரும்படி காத் தி ருந்தார்கள், ஆனால் மெசியாவாகிய இயேசு அவர்கள் மத்தியில், அவர்கள் அருகில் நின்று, அவர்களோடு, அவர்களுடைய பாiஷயிலே பேசிய போதும் அவர்கள் மீட்பர் இயேசுவை புறக்கணித்தார்கள். மெசி யாவாகிய இயேசுவுக்கு வழியை ஆயத்தம் பண்ண வந்த முன்னோ டியாகிய யோவான் ஸ்நானன், இப்படிபட்டவர்களை நோக்கி: ஆபிர காம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொட ங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள் ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; என்று கடிந்து கொண்டான். பிரியமானவர்களே, சற்று தரித்திருந்து சிந்தியுங்கள்! நீங்கள் எந்தக் குழுவை சேர்ந்தவர்கள்? நீங்கள் எதினால் விசேஷpத்தவர்கள்? உங்கள் குடும்ப கோத்திர பின்னனியினால் மேன்மை உண்டா? உங்களை குறித்து நீங்களே மேன்மையானவர்கள் என்று மிஞ்சின எண்ணங் கொள்ளாமல், தேவ கிருபை பெருகும்படி மாயமற்ற தாழ்மையை தரித்துக் கொள்ளுங்கள். நாம் எப்போதும் நம்முடைய ஆண்டவராகிய இயேசுவோடு ஒட்டப்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆண்டுகள் கடந்து செல்லும் போது நிர்விசாரிகளாக மாறிவி டாமல் எப்போதும், தேவ சமுகத்திலே நம்மை தாழ்த்தி, தேவனோ டுள்ள உறவிலே வளர்ந்து பெருகுவோமாக.

ஜெபம்:

என் கன்மலையாகிய கர்த்தாவே, இந்த உலகத்தின் போக்கின்படி நான் வைராக்கியம் பாராட்டாமல், உயிர்வாழும் நாட்களெல்லாம் உம் மைப் பற்றிக் கொண்டு தேவ சாயலிலே வளர கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:9