புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 08, 2022)

காரியத்தின் கருப்பொருள்

பிரசங்கி 12:13

தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே


ஒரு கிராமத்தில் வசித்து வந்த பெற்றோர், தங்கள் மகனானவனை எப்படியாவது பட்டணத்திலுள்ள கல்லூரியொன்றில் சேர்த்துவிட வேண் டும் என்று நேர்மையான வழியில் முழுமனதோடு பிரயாசப்பட்டார்கள். அந்தக் கல்லூரிக்கு கொடுக்கப்பட வேண்டிய நன்கொடைக்காக கடுமை யாக உழைத்தார்கள். அவர்களின் பிரயாசத்தின் பலனாக அவர்கள் அந் தக் கல்லூரியில் அனுமதியை பெற்றுக் கொண்டார்கள். மகனானவன் முதலாம் வகுப்பிற்கு செல்லவிரு ந்த போதிலும், அவன் பட்டம் பெற்று விட்டான் என்பதுபோன்ற பெரு மகி ழ்ச்சியும் பரபரப்புமடைந்தார்கள். அவர்களுடைய அயலவர்கள், நண் பர்கள், உறவினர்கள், உங்கள் மகன் எங்கே படிக்கின்றான் என்று கேட்டால், பெருமிதத்தோடு அந்தக் கல்லூரியின் பெயரை அவர்கள் சொல்லிக் கொள்வார்கள். இவ்வகை யான நிகழ்வுகள் நம் வாழ்க்கையில் நடக்கும் போது உண்மையிலே நமது மனதிலும் மகிழ்ச்சி ஏற்படுகின்றது. குறிப்பிட்ட அந்தக் கல்லூரி யில் அந்த சிறு பையனானவன் சேர்ந்திருப்பது நல்லது ஆனால் அவன் அக்கல்லூரியின் தகுதிக்கேற்ப கல்வியை கற்றுக் கொள்ள வேண்டும். ஒழுங்காக கல்வி கற்காமல் நான் அந்தக் கல்லூரியின் மாணவன் என்று பெருமைபாராட்டிக் கொள்வதினால் அவனுக்குண்டாகும் மேன்மை மிக மிக அற்பமானது. மனிதர்களுடைய வாழ்கையிலே, இப்படியாகவே அவ ர்களது தேசப்பற்று, சமுகப்பற்று, சபைப்பற்று, தாங்கள் இணைந்திரு க்கும் சிறப்புக் குழுக்கள் பற்றிய மேன்மை மனிதர்களின் வாழ்க்கை யிலே பொதுவாக காணப்படுகின்றது. இன்று நம் மத்தியிலும் சிலர், நான் இன்னாருடைய சபையிலே அங்கத்தவராக இருக்கின்றேன் என்று பிரபல்யமான போதர்களின் பெயர்களை சொல்லிக் கொள்வார்கள். தாங்கள் செல்லும் சபையிலே ஆயிரக்கணக்கான விசுவாசிகள் இருக் கின்றார்கள் என்று பெருமை பாராட்டுவார்கள். இவையெல்லாம் நல்லது ஆனால் அது ஒரு ஆரம்பம் மட்டுமே. தாம் இணைந்திருக்கும் சபையிலே கீழ்படிவோடு ஐக்கியமாக அன்புள்ளவர்களாக இருக்க வேண்டும், அனு தினமும் வேதத்தை வாசித்து, தியானித்து, தேவ வார்த்தையின் வழி யிலே நடக்க வேண்டும். ஊக்கமாக ஜெபிக்க வேண்டும். அங்கே போதி க்கப்படும் தேவ செய்தியை கேட்டு அதன்படி நாளுக்குநாள் மனம் மறு ரூபமாக வேண்டும்.இவைகள் ஒரு மனிதனின் ஆவிக்குரிய வாழ்வில் இல்லையென்றால் அவன் எங்கு இணைந்திருந் தாலும் தான் போகும் வழியைக் குறித்து மிகவும் எச்சரிக்கையுள்ளவனாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, என் வாழ்வின் கருப்பொளாகிய நித்திய ஜீவனை பற்றிக் கொள்ளும்படிக்கு, நான் உம்முடைய சித்தத்தை நிறைவேற்ற எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 4:34