புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 06, 2022)

இயேசு எங்கே இருக்கின்றார்?

1 கொரிந்தியர் 3:16

நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?


மேற்கத்தைய நாடொன்றில் குறிப்பிடப்பட்ட பிரபல்யாமான பட்டணத்திலே, கட்டப்பட்ட பிரமண்டமானதொரு ஆலயக் கட்டிடத்திலே, ஆயிரக் கணக்கான விசுவாசிகள் ஒன்றுகூடி ஆராதனை செய்தார்கள். ஆராதனைக் குழுவில் பல உறுப்பினர்கள் வரிசையிலே நின்று இராகம் தாளம் தப்பாமல் ஆராதனைப் பாடல்களை இனிமையாகப் பாடினார்கள். அநேக வாத்தியக்கருவி களை நேர்த்தியாக இசைத் தார் கள். அங்கிருந்த யாவரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். உலகத்தின் இன்னுமொரு பகுதியிலே, யாரும் அறியாத குக்கிராமமொ ன்றிலே இருந்த மிக எளிமையான சபை கொட்டிலிலே, சில விசுவாசிகள் ஒன்றுகூடி, தங்கள் கரங்களைத் தட்டி, தேவ ஆராதனைப் பாடல்களை பாடி, மகிழ்ச்சியுடன் ஆராதனை செய்தார்கள். இந்த இரண்டு இடங்களிலும் எங்கே ஆண்டவர் இயேசு எங்கே பிரசன்னமாக இருப்பார்? சற்று சிந்தித்துப் பாருங்கள். இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்று இயேசு கூறியிருக்கின்றார். (மத்தேயு 18:20) யாருடைய ஆராதனையானது தேவனுக்கு ஏற்புடையதாக இரு க்கும்? பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழு துகொள்ளு கின்றவர்களின் ஆராதனையே அவருக்கு ஏற்புடைய ஆராதனையாக இருக்கும். (யோவான் 4:23) யாருடைய துதி அவருக்கு சுகந்த வாசைனயாக இருக்கும்? தன் கைகளின் கிரியைகளில் சுத்தமுள்ளவனும், தேவன் விரும்பும் தூய்மையான இருதயத்தில் இருந்து எழுந்து வரும் துதியே அவருக்கு சுகந்த வாசனையாக இருக்கும். தேவனுக் கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணிக்கமாட்டீர் (சங் கீதம் 51:17). யாரோடு தேவ கிருபை தங்கியிருக்கும்? யாருக்கு தேவன் தமது கிரு பையை பொழிகின்றார்? தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். (யாக்கோபு 4:6). ஆம், பிரியமானவர்களே, முழு உள்ளத்தோடு தம்மை தேடுகின்றவர்கள், மேற்கில் இருந்தாலும், கிழக்கில் இருந்தாலும், ஆலயத் திலிருந்தாலும், ஒருவேளை சிறையிலே இருந்தாலும், நம்முடைய தேவன் தம்முடையவர்கள் மத்தியிலே வாசம் பண்ணுகின்றவராயிருக்கின்றார்.

ஜெபம்:

துதிகளின் மத்தியிலே வாசம் செய்யும் தேவனே, நான் எங்கிருந்தாலும், என்ன நிலைமையிலிருந்தாலும், உமக்கு பிரியமான ஆராத னையை செய்யும்படிக்கு, உணர்வுள்ள இருதயத்தை தந்து என்னை வழிந டத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 96:9

Category Tags: