புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 05, 2022)

நிறைவானவைகளை காத்துக் கொள்ளுங்கள்

பிலிப்பியர் 3:13

பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,


ஒரு கிராமத்திலே வாழ்ந்து வந்த மனிதனானவன், தன் குடும்பத்தைக் குறித்து மிகவும் கருத்தோடு விசாரிக்கின்றவனாக இருந்து வந்தான். அவன் பெரும் உத்தியோகஸ்தனாக இல்லாத போதிலும், பிழைப்புக் காக, தன்னால் முடிந்த வேலைகளை நாளாந்தம் செய்து தன் குடும்பத்தின் தேவைகளைச் சந்தித்து வந்தான். ஆண்டுகள் கட ந்து சென்றபோது, அவன் குடும்பத்தில் நிலைமைகள் மிக வும் விருத்தியடைய ஆரம்பித்தது. குடும்பத்திலே பொருளாதார செழிப்பு உண்டாயிற்று. பிள்ளைகளும் தங்கள் உயர்கல்வியை முடித்து, நல்ல உத்தியோகங்களிலே அமர்ந்தார்கள். அந்த மனிதனானவனை அறிந்த அயலவர்கள்கூட அவனுடைய மனத்தாழ்மையையும், விசுவாசத்தையும், அர்ப்பணிப்பையும், பிரயாசத்தையும் குறித்து சாட்சி கொடுத் திருந்தார்கள். நாட்கள் கடந்து சென்றதும், தன் ஒய்வு நேரத்திலே சில காரியங்களை குறித்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று, வயது வந்தோர்க்கான மாலை நேர வகுப்புகளிலே இணைந்து, இரண்டு ஆண்டுகளுக்கு பின்தான் படித்து வந்த பாடங்களிலே தேர்ச்சி பெற்றுக் கொண்டான். இப்போது தான் கற்றுக் கொண்டவைகளை வாழ்க்கையிலே பயிற்சி செய்ய வேண்டும் என்று, தான் எடுக்கும் முடிவுகளுக்கு கல்வியை மையமாக வைத்துக் கொண்டான். தற்போது தானும்; கற்றிருக்கின்றேன் என்ற பெருமை அவனுக் குள் வளர ஆரம்பித்தது. முற்காலங்களிலே, தன் வாழ்வின் காரியங்களை மனத் தாழ்மையோடு, சிறப்பாக நடத்தி முன்னானவைகளை வாஞ்சித்த அந்த மனிதனானவன், தற்போது பெருமையுள்ளவனாக பின் னானவைகளை மேன்மையானவைகள் என எண்ணிக் கொண்டான். பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகின்ற சகோதர சகோரிகளே, இந்த நாளின் தியானமானது, கல்வியையோ, உத்தியோகங்களையோ குறித்ததல்ல. அந்த மனிதனானவனின் உள்ளத்திலே திவ்விய சுபாவமாகிய மனத்தாழ்மை இருந்தது. ஆனால் அவன் இந்த உகத்திலே கற்றவைகளினால் இப்போது, அவனுக்குள் கர்த்தர் வெறுக்கின்ற பெருமையான சுபாவம் உண்டாயிற்று. முன்னானவைகளை தன் வாழ்விலே பெற்றிருந்தவன், இப்போது, பின்னானவைகளுக்கு திரும்பினான். எனவே, தேவனாகிய கர்த்தர் உங்களுக்குகொடுத்திருக்கும் மேன்மையானவைகளை மறந்து, இந்த உலகப்போக்கின் கண்ணியிலே நீங்கள் சிக்கிக் கொள்ளாமல், கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனானவர் கொடுத்த அழைப்பை காத்துக் கொள்ளுங்கள். பரலோக மேன்மைக ளையே எப்போதும் நாடுங்கள்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே எனக்காக வைத்திருக்கின்றீர். நான் எப்போதும் இலக்கை நோக்கி முன்னேறிச் செல்ல கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கொலோ 3:1-4