புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 04, 2022)

நிர்க்கதியான நிலை!

சங்கீதம் 57:2

எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.


தேசத்தின் பொருளாதர வீழ்ச்சியினால், வாழ்வாதாரத்திற்காக இருந்த சில வழிகள் அடைக்கப்பட்டாயிற்று. நம்பியிருந்த நண்பர்கள் கைகளும் கட்டப்பட்டாயிற்று. ஆதரவாக இருந்த மனிதர்களுக்கும் உதவி செய்ய முடியாத நிலைமையுண்டாயிற்று. நடுக்கடவிலே கடும் அலைகள் மோதும் படகிலே இருப்பதைப் போன்ற சூழ்ந்நிலையானது ஒரு விசுவா சியை வாட்டியது. எப்பக்கமும் நெருக்கப்பட்டு, போவதற்கு வழி ஏதும் இல்லாமல் நிர்க்கதியான நிலை யிலே தள்ளப்பட்டிருக்கின்றேன், தேவனே நான் என்ன செய்வேன் என்று அவன் தன் மனதிலே நொந்து கொண்டான். இப்படி யாக தன் படுக்கையிலே நித்தி ரையில்லாமல் புரண்டு கொண்டி ருக்கும் வேளையிலே, தீடீரென்று, தேவனாகிய கர்த்தர் செங்கடலை பிளந்து, தம்முடைய ஜனங்கள் வெட் டாந்தரையிலே நடந்து செல்வதைப் போல, வழியை உண்டாக்கிய சம்ப வம் அவன் உள்ளத்திலே தோன்றிற்று. அவன் மனக் கண்கள் திறக்க ப்பட்டது. நான் சபை நடுவிலே பெரிதான அதிசய சாட்சியை பகர்ந்து கொள்வதற்கு தேவனாகிய கர்த்தர் தன்னை ஆயத்தப்படு த்துகின்றார் என்பதை எந்த சந்தேகமுமின்றி அவன் விசுவாசித்தான். வழிகள் அடைக்கப்பட்டு, எதிரிகள் சூழ்ந்து கொள்கையில், யாரும் அறியாததும், மனித அறிவுக்கு எட்டாததுமான வழியைத் திறக்கின்ற தேவன் என்னு டைய தேவனாகிய கர்த்தர் என்றும், அவர் வனாந்தரத்திலே வழியை யும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்கின்றவர் என்றும் அறிக்கையிட்டான். அவனுடைய பெலவீனமான நேரத்திலே, தேவனு டைய கிருபையானது அவனுக்கு புதுபெலன் கொடுத்து அவனை உண ர்வடையச் செய்தது. அவன் நம்பிக்கை வீண்போகவில்லை. நாளடை விலே அவனுக்கு எதிராக வந்த எல்லா சூழ்நிலைகளையும் அவன் கடந்து, தேவன் உண்டாக்கிய புதிய வழியிலே வெற்றி சிறந்தான். ஆம், பிரியமானவர்களே, இக்கட்டும் நெருக்கமும் உங்களை சூழ்ந்து கொள்ளும் போது, மனம் தளர்ந்து போய்விடாதிருங்கள். விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உன்னதமானவரின் மறைவிலிருங்கள். சர்வவல்ல வருடைய நிழலில் தஞ்சமடையுங்கள். தேவனாகிய கர்த்தர்தாமே, உங்களை பலர் முன்னிலையிலே, தம்முடைய நாமத்தின் மகிமையின் சாட்சியாக நிறுத்துவார். அவரை நம்பியிருக்கின்றவர்கள் ஒருநாளும் வெட்கப்பட்டுப் போதில்லை.

ஜெபம்:

வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்க வல்ல தேவனே, நெருக்கங்கள் என் வாழ்வை சூழ்ந்து கொள்ளும் போது, உம்மில் நிலைத்திருக்கும்படி கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 43:18-21