தியானம் (மார்கழி 03, 2022)
நாம் தேவனுடைய வீட்டார்
சங்கீதம் 139:2
என் நினைவுகளைத் தூரத் திலிருந்து அறிகிறீர்
ஒரு ஊரில் இருந்த நீதிமன்மொன்றிலே வழக்கொன்று நடந்து கொண்டி ருந்தது. குறித்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியானவர் அநேக ஆண்டு கள் நீதிபதியாக பணிபுரிந்தவராகயிருந்தார். மிகவும் அனுபவமிக்க அந்த நீதிபதியானவர், வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் போது, தகுதியற்ற வார்த்தைப் பிர யோகமொன்றை வெளிப்படுத்திவிட் டார். அந்த வார்த்தை யானது தவ றானதாக இருந்தபோதும், அவர் தன் நிலைமையை நியாயப்படுத்த முய ற்சி செய்யாமல், தான் பேசிய வார்த்தை தகுதியற்றது என் பதை ஏற்றுக் கொண்டார். சட்டப்படி தன் குற்றத்திற்கான அபராதத்தையும் ஏற்றுக் கொண்டார். அதைவிட மேன்மையான காரியம் என்னவென்றால், அந்த நீதிபதியானவர் தன்னுடைய தகுதியற்ற வார்த்தைப் பிரயோகத்திற்காக உண்மையிலேயே மனம்வருந்திருனார். இதினிமித்தம் அந்த ஊரிலே, அவருக்கு முன்பு இருந்த கனத்தைவிட, அதிக கனத்தை ஊரார் அவ ருக்கு கொடுத்தார்கள். நீதிமன்றத்திலே பல மனிதர்கள் பற்பல வேலை களுக்கென அமர்;;த்தப்பட்டிருக்கின்றார்கள். அங்கே அவர்கள் வேலை செய்வதால், அவர்கள் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். அவர்கள் குற்றம் செய்தால், அது குற்றமில்லாமல் போய்வி டாது. ஆனால், அங்கு வேலை செய்பவர்களில் சிலர், சில சந்தர்ப்பங்க ளிலே, தங்களுக்கென பல சாட்சிகளை ஏற்படுத்தி தங்கள் குற்றங்களை மூடிமறைத்து, தங்கள் குற்றங்களை நியாயப்படுத்தி தப்பித்துக் கொள் ளலாம். ஆனால், தேவாதி தேவனுடைய ராஜ்யத்தின் பிள்ளைகளாக, ஆண்டவர் இயேசுவின் நாமத்தை தரித்தவர்களாக, அவருடைய வீட்டில் வேலைகளை நடத்தி வரும் நாம் யாவரும், நம்முடைய குற்றங்களை மூடிமறைக்கக் கூடாது. மாறாக, அந்த நீதிபதியைப் போல, மனம்வ ருந்தி, நம்முடைய குற்றங்களை ஏற்றுக் கொண்டு, தேவனிடத்திலே அறிக்கை செய்து, அதைவிட்டுவிட வேண்டும். ஆண்டவராகிய இயேசு இந்த பூவுலகிலே வாழ்ந்த நாடகளிலே சிறப்பு குடிமக்களாக இருந்த பரிசேயர், சதுசேயர், வேதபாரகரில் பலர், தாங்கள் தேவனுடைய வீட்டை சேர்;ந்தவர்கள் என்று தங்களை குறித்து மேன்மைபாராட்டி வந் தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ அவர்களின் மறைவான அநீதி நிறைந்த வாழ்க்கை முறையை வெகுவாய் கண்டித்தார். தேவனுக்கு பயப்படுகின்றவர்கள் தங்கள் குற்றங்களை மூடி மறைக்க மாட்டார்கள். தேவனுக்கு மறைவானது ஒன்றுமில்லை. எனவே நாம் எப்போதும் தேவனுக்கு முன்பாக நம்மை தாழ்த்தி, மற்றவர்களுக்கு முன்மாதிரியான தும், தேவனுக்கு பிரியமுமான பிள்ளைகளாகவும் வாழ்வோமாக.
ஜெபம்:
உம்முடைய நாமத்தின் மகிமைக்கென்று என்னை தெரிந்து கொண்ட தேவனே, உம் சமுகத்திலே நான் மனத்தாழ்மையுள்ளவனாக காணப்படும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எபேசியர் 2:19