புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 02, 2022)

வேற்றுமை இல்லை

யாக்கோபு 2:1

என் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக் கொள்ளாதிருப்பீர்களாக.


ஒரு பட்ணடத்திலுள்ள குறிப்பிட்ட பாடசாலையொன்றிலே கல்வி கற்கும் படிக்கு பல தரப்பட்ட மாணவர்கள் செல்கின்றார்கள். அவர்களில் சிலர் மாண த்தலைவர்களாக பதவிவகிக்கின்றார்கள், வேறு சிலர் விளையாட்டு துறைகளிலும், இன்னும் சிலர், பாடசாலை நாட்களிலே, கல்வி தவிர்ந்த பற்பல கலைகளிலே பொறுப் பான பதவிகளை வகித்து வருகின் றார்கள். அவைகளினாலே அவர்க ளுக்கும், பாடசாலைக்கும் சில நன்மைகள் ஏற்படுகின்றது. ஆனால், அவர்கள் யாவரும், எந்தப் பாகுபாடுமின்றி அரசாங்கத்தினாலே நட த்தப்படவிருக்கும் பொதுப் பரீட்சை க்கு முகங்கொடுக்க வேண்டும். அந்த பரீட்சையிலே சித்திபெற வேண்டுமாயின் அவர்கள் யாவருக்கும் கொடுக்கப்பட்ட பாடங்களை கவனமாகப் படித்து, பரீட்சைக்கு ஆயத்தப்பட வேண்டும். மாணவர்கள் பாடசாலையிலே பெரும் பதவிகளையும் பொறுப்புக்களையும் பெற்றிருக்கலாம் ஆனால் அதனால் அவர்கள் பரீட்சைக்கு தப்பிப் கொள்ள முடியாது. அவ்வண்ணமாகவே, தேவனுடைய வீட்டிலே நாம் பற்பல ஊழியங்களை செய்து வருகின்றோம். சிலர் மோசேயைப் போல பெருந் தலைவர்களாக இருக்கலாம். வேறு சிலர் பேதுருவைப் போல முதன்மையான சீஷனாக இருக்கலாம். இன்னும் சிலர், தாவீதைப் போல ராஜாவாக இருக்கலாம். எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், தேவ நீதியானது ஆளுக்காள் மாறிப்போவதில்லை.இந்நாட்களிலும்கூட பலர் வௌ; வேறு வகையான ஊழியங்களை தேவனுக்கென்று செய்து வருகின்றார்கள். சிலர் பெரிய பொறுப்புக்களிலே இருக்கலாம், வேறு சிலர் சிறிய காரியங்களை செய்து வரலாம். சிலர் அருபிருத்தி அடைந்த நாட்டிலே வாழ்ந்து வரலாம், வேறுசிலர் வறுமையான இடங்களிலே வாழ்ந்து வரலாம். யாவரும் தேவ வார்த்தைக்கு கீழ்படிகின்றவர்களாகவே தங்கள் கிரியைகளை நடப்பிக்க வேண்டும். சிறியவன் குற்றம் செய்தாலும், பெரியவன் குற்றம் செய்தாலும், யாராக இருந்தாலும் பாவம் பாவமே. தேவனிடதில் பட்சபாதம் இல்லை. இந்த உலக அளவுகோலின்படி உயர்ந்தவனாக இருந்தாலும், தாழ்ந்தவனாக இருந்தாலும் ஒவ்வொரு வரும் தங்களைக்குறித்த பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை தங்கள் வாழ் க்கையிலே நிறை வேற்ற வேண்டும். தேவன் அவனவனுடைய கிரியை களுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். நம்முடைய தேவனி டத்தில் பட்சபாதம் இல்லை.

ஜெபம்:

எல்லோர்மேலும் உம் கிருபையை பொழிகின்ற தேவனே, நான் எந்நிலையிலிருந்தாலும், உம் வார்த்தைக்கு கீழ்படிந்து, தேவ சித்த்ததை என் வாழ்வில் நிறைவேற்ற என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 2:6-11