புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 01, 2022)

அறியாத புதிர்கள்

யோவான் 14:27

உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.


இன்று உங்கள் மனதை கலங்கடிக்கும் காரியங்கள் ஏதேனும் உண்டோ? தற்போது உங்களுக்கு முன்பாக நிற்கும் மலைபோன்ற பிரச்சனைகள் என்ன? ஆண்டவராகிய இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற் குப் போகும்படியான தம்முடைய வேளை வந்தபோது, இனி நடக்க இருக்கும் காரியங்கள் இன்ன என்னபதை முழுமையாக அறியாதிருந்த தம்முடைய சீஷர்களின் மனங்கள் குழப்பமடைந்திருபப்தை அறிந்து கொண்டார். அந்த சீஷர்கள் தங்களி டமிருந்த எல்லா வற்றையும் விட்டு விட்டு, இயேசுவை பின்பற்றி சென் றிருந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. தேவனிடத்தில் விசுவா சமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆய த்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆய த்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும் படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள் ளுவேன் என்ற வாக்குத்தத்தத்தை அவர்களுக்கு கொடுத்தார். மேலும் அவர் கூறுகையில் நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன். என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியா கிய தேற்றர வாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களு க்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டு வார் என் றார். ஆம் பிரியமானவர்களே, நம்முடைய வாழ்க்கையிலும் கூட பல சவால்கள் மத்தியிலே, பல தியாகங்களோடு ஆண்டவர் இயேசுவை பின்பற்றிச் சென்றுகொண்டிருக்கின்றோம். சில வேளைகளிலே, நம் மனதை கலங்கடிக்கும் சம்பவங்களும், மலைபோல நம்முன்னே நிற்கும் பெரிய பிரச்சனைகளும் ஏற்படுவதுண்டு. நம் வாழ்க்கையிலே இனி நடக்கவிருக்கும் சம்பவங்கள் இன்னதென்பது அறியாத புதிராக இருக் கும் நிலைமைகளும் ஏற்படுவதுண்டு. ஆனால், நம்முடைய ஆண்டவ ராகிய இயேசுவின் வாக்குத்தத்தங்கள் மாறாதவைகள். அவர் நம்மை திக்கற்ற வராய் விடாமல், சகல சத்தியத்திலும் நடத்தும், சத்திய ஆவி யானவரை நமக்குத் தந்திருக்கின்றார். எனவே, உங்கள் இருதயம் கல ங்காதிருப்பதாக. மறுபடியும் வருவேன் என்றவர், வாக்கிலே உண்மையு ளள்வர்கள். அவரோடு நாம் நித்தியமாய் வாழும்படி நம்மை அழைத்து செல்லும்படி அவர் மறுபடியும் வருவார். எனவே திடன் கொள்வோமாக.

ஜெபம்:

சமாதானம் தரும் தேவனே, நீர் குறித்த காலம் நிறைவேறும் வரைக்கும்இ உம்மில் உறுதியாய் தரித்திருந்து, பொறுமையோடு உம்முடைய சித்தத்தை நிறைவேற்றி முடிக்க பெலன் தந்து நடத்துவீராக . இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 18:28-30