புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 30, 2022)

நன்றியோடு முன்னேறிச் செல்வோம்

ஏசாயா 59:1

கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.


நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரமானது செழித்து வளர்ந்து அதின் காலத்திலே பூத்து, சுவையான கனியை கொடுத்தது. அதைப் போலவே, கர்த்தருடைய வழியிலே நடத்து, அவருடைய நேரத்திற்காக பொறுமையாக காத்திருக்கும் மனிதனும், தன் காலத்திலே கனி கொடுக்கும் மரத்தைப் போல இருக்கின்றான். சில வேளைகளிலே, என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவ னிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் சில தேவ பிள்ளைகள் தங்கள் மனதிலே எண்ணிக் கொள்கின்றார்கள். ஆனால், பூமியின் கடையாந்தரங்க ளைச் சிருஷ;டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது என்று, ஏசாயாவின் தீர்க்கதரிசன புத்தகத்திலே வாசிக்கின்றோம். பிரியமான சகோதர சகோதரிகளே, கர்த்தர்மேல் உங்கள் பாரத்தை இறக்கி வைத்து விடுங்கள். அவர்மேல் விசுவாச மாயிருக்கின்ற நீங்கள் அவருடைய வேளைக்காக காத்திருங்கள். அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; என்பதை அறிந்திருக்கின்ற நீங்கள் சோர்ந்து போகாதிருங்கள். சோர்ந்து போகின்ற வேளையிலே, இந்த வாக்குத்தத்தங்களை அறிக்கையி டுங்கள். சோhர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவ மில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுக ளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.இந்த வருடத்தின் பன்னிரண்டாவது மாதத்திற்குள் பிரவேசிக்கின்ற நீங்கள், கடந்த மாதங்களை திரும்பிப் பார்த்து, தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுகளை நினைத்து நன்றியறிதலுள்ளவர் களாக அடுத்த மாதத்திற்குள் பிரவேசியுங்கள். உங்கள் தேவைகளை பரமபிதா அறிந்தி ருக்கின்றார். அவர் நம்மை விசாரிக்கின்ற தேவனாயிருக்கின்றார். எனவே, உங்கள் வழிகளையும், மனதின் யோசனைகளையும் பூரணமாக அவருக்கு ஒப்புப் கொடுங்கள். அப்பொழுது அவருடைய சத்தம் தெளிவாக உங்கள் உள்ளத்தில் ஒலிப்பதை உணர்ந்து கொள்வீர்கள். வாக்கு மாற தேவன் உங்களை வழிநடத்திச் செல்வார்.

ஜெபம்:

கண்மணிபோல காக்கும் தேவனே, நீர் இதுவரை காலமும் என் வாழ்வில் செய்த நன்மைகளுக்காக நன்றி. எப்போதும் நான் உம்மிலே நிலைத்திருக்கும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:4-6