புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 29, 2022)

ஆறாத காயங்கள் ஆற்றப்படட்டும்

லூக்கா 6:28

உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.


ஒரு மாணவனானவன், பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டி ருந்த வேளையிலே, சைக்கிளிலே அதி வேகமாக வந்த வேறு சில மாணவர்கள், அந்த மாணவனானவனை கடந்து செல்லும் போது, அவனை விழும்படியாக தள்ளிவிட்டு ஓடி சென்று விட்டார்கள். அத னால், அந்த மாணவனானவனின் சரீரத்திலே பல காயங்கள் ஏற்பட்டது. அந்தக் காயங்கள் அவன் செய்த குற்றத்தினாலே உண்டாகவி ல்லை. குறும்புத்தனமாக அவ னை அடித்துவிட்டு ஓடிச் ஒளிந்து கொண்ட மற்றைய மாணவர்களுக்கு எதிராக அவன் எந்த குற்ற மும் செய்யவும் இல்லை. அவனு டைய நிலைமையக் கண்டு, அவன் வீட்டார், உற்றார், நண்பர்கள் மற்றும் அயலவர்கள் அவனுக்காக பரிதவித்தார்கள். அந்த மாணவனும், சரீரத்தில் ஏற்பட்ட காயங்களின் வேதனையினால், துன்பப்பட்டான். ஆனாலும், மற்றவர்களுடைய பரிதா பங்களும், மனவேதனைகளும், அவனுடைய காயங்களை சற்றேனும் ஆற்றப் போவதில்லை. அந்த காயங்களை அப்படியே விட்டுவிட முடி யாது. அவன் சுகமடையும்படி காயங்கள் கட்டப்பட வேண்டும். இவ்வண்ணமாகவே, நம் வாழ்வின் மனக்காயங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. சில வேளைகளிலே, மனதில் ஏற்படும் புண்கள் மனிதர்களின் சுயஇச்சையினால் ஏற்படுகின்றது. வேறு சில வெளிச் சூழ்நிலைகளி னாலே, குற்றங்கள் ஏதும் செய்யாதிருந்தாலும், மற்றய மனிதர்களினால் ஏற்படுத்தப்படுகின்றது. மனதிலே ஏற்படும் காயங்கள் எப்படியாக உண்டாகியிருந்தாலும் அவை காயம் கட்டப்பட வேண்டும். சிலரோ ஆற்ற படாததும், நாள்பட்டதுமான வன்மம் கசப்பு, வைராக்கியம், பகை, விரோதம் போன்றவற்றை தங்கள் மனதிலே வைத்திருக்கின்றர்கள், இவர்கள் தங்கள் மதிகேட்டினிமித்தம் தங்கள் மனப்புண்கள் அழுகி நாற்றமெடுக்க விட்டுவிடுகின்றார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, ஆறாத காயங்களை ஆற்றித் தேற்றும் தேவ ஆவியானவர் நம்மோடு இருக்கின்றார். தேவன் உங்களுக்கு கொடுத்த சமாதானத்தை கெடுத்துக் கொள்ளும்படிக்கு மற்றவர்களுக்கு இடங் கொடுக்காதிருங்கள். ஒரு வேளை உங்களுக்கு எதிராக மனிதர்கள் காரணமில்லால் செயற்பட்டாலும், ஆண் டவர் இயேசுவின் வார்த்தைகளைப் பற்றிக் கொண்டு, அவர்களை சபிக்காமல், அவர்களை ஆசீர்வதியுங்கள், அவர்களுக்காக ஜெபம் பண்ணு ங்கள். உங்கள் மனதில் புண்கள் நாட்பட்டுப் போக விட்டுவிடாதிருங்கள்.

ஜெபம்:

மனப்புண்களை ஆற்றித் தேற்றும் தேவனே, நீர் தந்த தெய்வீக சமாதானத்தை குலைத்துப் போடும் ஆறாத காயங்கள் யாவும் ஆற்றப்பட இடம் கொடுக்க, பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 40:31