புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 28, 2022)

கடந்து வந்த பாதை...

2 கொரிந்தியர் 4:17

அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.


வாழ்க்கையிலே பல ஆண்டுகள் கடந்து போய்விட்டது. அதன் பெரும் பகுதி வனாந்திரத்தில் யாத்திரை செய்வது போல அநேக பாடுகளும் மனவேதனைகளும் நிறைந்ததாக இருந்தது. நான் தவறு செய்த நாட்கள் இல்லை என்று நான் கூறவில்லை, ஆனாலும், அவைகளால் ஏற்பட்ட துன்பங்களைவிட, என்னிடம் நன்மையை பெற்றவர்களால் உண்டான மனப்புண்கள் அதிகமாயிருந்தது. ஒரு கதையைப்போல் எங்கள் வருஷங்கள் கடந்து போகின்றது என்று ஒரு மனித னானவன் தன் நண்பனிடம் கூறிக் கொண்டான். அதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த அவனுடைய நண்பனானவன் அவனை நோக்கி: நண்பா, இத்தனை பாடுகள், துன்பங்கள், வேதனைகள் மத்தியிலும், நீ இன்னமும் ஆண்டவராகிய இயேசு வுக்குள் நிலைத்திருக்கின்றாயே, எத் தனை ஆச்சரியமான சாட்சி என்பதை நீ எப்போதவாது எண்ணிப் பார்த்ததுண்டோ? நம்முடைய கர்த்தராகிய இயேசு, நம்முடைய மீறுதல் களினிமித்தம் காயப்பட்டார். நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக் கணிக்கப்பட்டவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார். ஆனாலும், அவர் மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படி ந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தி, பிதாவாகிய தேவனுடைய திருச் சித்தம் நிறைவேற முற்றிலுமாய் தன்னை ஒப்புக் கொடுத்தார். நீயும் அந்த சாயலிலே பங்குள்ளவனாக வாழ்ந்து வருகின்றாய். பாடுகளின் வழியாக வாழ்க்கையை வெறுத்துவிடாமல், கிறிஸ்து இயேசுவின் சாயலிலே வளர்ந்து வருகின்றாய். ஈடு இணையில்லாத மகிமைகுள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும் கர்த்தரிலும், அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படு என்று உற்சாகமளிக்கும் அறிவுரைகளைக் கூறினான். ஆம், பிரியமானவர்ளே, இந்த உலகத்தின் வாழ்வு சீக்கி ரமாய் கடந்து போகும். இன்னும் கொஞ்சக் காலம் இந்த பூமியின் நாட் கள் முடிந்து போகும். வரவிருக்கும் பலனோ நித்தியமானது. ஈடு இணையற்றது. எனவே 'நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம் பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.' என்ற வசனத்தை தினமும் அறிக்கையிடுங்கள். தேவ ஆவியானவர்தாமே உங்களை திடப்படுத்தி வழிநடத்திச் செல்வார்.

ஜெபம்:

காலைதோறும் எங்களை உமது கிருபையால் திருப்த்தியாக்கி நடத்தும் தேவனே, பாடுகள் மத்தியிலும் பரமன் இயேசுவின் சாயலிலே நான் நாள்தோறும் வளர என்னை பெலப்படுத்தி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங் 90:14-16