புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 27, 2022)

ஞானப்பாடல்கள்

சங்கீதம் 40:3

நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்


உலக பிரசித்திபெற்ற பாடகனொருவன், ஒரு பாடலை எழுதி, இசை யமைத்து உலக அரங்கிலே வெளியிட்டான். கோடிக் கணக்கான ரசிக ர்கள் அந்தப் பாடலை விரும்பிக் கேட்டார்கள். பாடலின் இசை காது களுக்கு இனிமையாகவும், இராகம் அருமையாகவும், பாடலின் வரிகள் உணர்வுகளை தூண்டுகின்றதாகவும் அமைந்திருந்தது. உலக அரங்கிலே அந்தப் பாடலானது முதலிடத்தை யும் பெற்றது. இதனால் பல இலட் சக்கணக்கான டொலர்களை அவன் பரிசாகப் பெற்றுக் கொண்டான். அந் தப் பாடலுக்கு அவனின் உள்ளத் திலே ஒரு உந்துதல் இருந்தது. அவ னுடைய மனதிலே ஒரு இலக்கு இருந்தது. அவன் மனம் விரும்பியது போல இந்த உலகத்திற்குரிய பெயரரையும், புகழையும், பரிப்பொருளையும் அவன் பெற்றுக் கொண் டான். மேற்கூறியவைகள் யாவும் இந்த உலத்தின் அளவுகோலின்படி உண்மையான கூற்றுக்கள். அந்தப் பாடலானது மாம்சத்தின் எண்ண ங்களுக்கு ஒத்திருப்பதால், இந்த உலகிலே நடக்கும் களியாட்டங்களி லும், கொண்டாட்டங்களிலும், ஜனங்கள் அவைகளை பாடுகின்றார்கள். துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொன்ளுகின்றவர்களின் வாயிலே அந்தப் பாடல் ஒலிக்கும். அதை எழுதிய மனிதனுடைய ஆத்துமாவிற்கு அது பக்திவிருத்தியை கொடுப்பதில்லை. ஏனெனில், பரலோகத்தின் பொக்கிஷங்களை இந்த உலகத்தின் போக்குகளினால் பெற்றுக் கொள்ள முடியாது. வேதத்திலே காணும் தேவனுடைய தாசர்கள் எழுதியிருக்கின்ற பாடல்கள், அவை தேவ ஆவியின் உந்துத லினால் எழுதப்பட்டது. அந்த பாடல்களின் இலக்கு பரலோகத்தின் பொக்கிஷங்களுக்குரியது. அவை திருப்பாடல்கள் என்றும் ஞானப்பாட ல்கள் என்றும் பெயர் பெற்றிருக்கின்றது. அந்த பாடலிலே, நம்மை உரு வாக்கிய அன்பின் தேவாதி தேவனை கனப்படுத்தும் துதி, நன்றியறிதல் உண்டு. ஜெபமும் வேண்டுதலும் உண்டு. தீர்க்கதரிசனங்களும், வழி நடத்துதலும் உண்டு. அந்த பாடல்களின் வரிகளிலே தேவ வார்த்தை இருப்பதால், மனிதனுடைய ஆத்தமாவானது தேற்றப்படுகின்றது. இரடசி ப்பும் விடுதலையும் அங்கே உண்டு. பிரியமானவர்களே, நீங்கள் எந்தப் பாடல்களால் உங்கள் மனதை நிரப்பிக் கொள்ள விரும்புகின்றீர்கள்? தேவனுடைய வார்த்தை எங்கே இருக்கின்றதோ அங்கே உங்கள் மன தும் இருக்கட்டும். தேவனுடைய வார்த்தையானது; ஆவியும் ஜீவனுமாய் இருக்கின்றது. அதினாலே நாம் நித்தியஜீவனை பெற்றுக் கொள்கின்றோம்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, நாட்கள் பொல்லாதவைகளாக இருப்பதால், சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு வாழ வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 5:19