புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 26, 2022)

புதிப்பிக்கப்படும் வாழ்க்கை

பிலிப்பியர் 4:11

ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.


நாம் குடும்பமாக கப்பலில்; சுற்றுலா சென்ற நாட்களை நினைத்துப் பார்க்கும் போது எப்போதும் பரவசமே. அந்த ஆண்டின் விடுமுறை நாட்க ளின் இனிய அனுபவத்தை தன்னால் மறக்கவே முடியாது என்று ஒரு மனிதனாவன் அவ்வப்போது பேசிக்கொள்வான். அந்த அனுபவமானது பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவமாக இருந்த போதிலும், தன் நண்பர்;கள், உறவினர், சக வேலை யாட்கள் விடுமுறை சுற்றுலாக்களைப் பற்றி பேசும் போது, குறிப்பிட்ட அந்த சம்பவத்தையே அவன் கூறி பெருமை பாராட்டிக் கொள்வான். இவ்வண் ணமாக மனிதர்கள் தங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களையும் சாதனைக ளையும் பற்றி மேன்மைபாராட்டுவது ண்டு. கடந்த நாட்களை குறிந்து சிந்தித்து, மகிழ்ச்சியடைவதில் தவறி ல்லை ஆனால் நாம் கடந்த நாட்களிலேயே, தரித்து நிற்க முடியாது. இவ்வண்ணமாகவே, சில விசுவாசிகள் தங்கள் கடந்த நாட்களையே குறித்து மேன்மை பாராட்டுவார்கள். எடுத்துக்காட்டாக, அந்த காலத் திலே நான், அதிகாலையிலே எழுந்து துதித்து வந்தேன். பல ஆண்டுக ளுக்கு முன் நான் வேதத்தை பல முறை வாசித்து தியானித்தேன் என்று பற்பல காரியங்களைக் குறித்து மேன்மை பாராட்டிக் கொள்வார்கள். கடந்த நாட்களை திரும்பிப் பார்த்து, நன்றியறிதலுள்ளவர்களாக இருப் பதும், நாம் கடந்து வந்த அனுபவங்களை சாட்சியாக மற்றவர்கள் மத்தி யிலே பகர்ந்து கொள்வதும் அவசியமானது. ஆனால், நாம் தேவ னோடு வாழும் வாழ்க்கையானது நம் வாழ்யில் ஒரு குறிப்பிட்ட ஆண் டில் ஆரம்பித்து சில ஆண்டுகளில் முடிந்து போவதில்லை. கிறிஸ்து வோடு வாழும் வாழ்க்கை இறந்த காலத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல. திராட்சை செடியிலே கொடிகள் நிலைத்திருந்து கனி கொடுப்பது போல, நாமும் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நிலைத்திருந்து இப்போதும், எப்போதும் கனி கொடுக்கின்றவர்களாக இருக்க வேண் டும். எந்த நிலைமையிலிருந்தாலும் நாம் கிறிஸ்துவுக்குள் எப்போதும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நாளுக்கு நாள் கிறி ஸ்துவுக்குள் புதிப்பிக்கப்படும் வாழ்க்கை, புதிய சாட்சிகள், புதிய அனு பவங்கள் நம் வாழ்க்கையில் எப்போதும் இருக்க வேண்டும். நாம் இந்தப் பூமியிலே வாழும்வரைக்கும் கிறிஸ்துவின் சாயலிலே மறுரூப மாக்கபட வேண்டும். எனவே, கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷ மாயிருங்கள்;.

ஜெபம்:

ஜீவனுள்ள தேவனே, என் கடந்த கால அனுபங்களிலே மட்டும் நான் தரித்திருக்காமல், இன்றும் என்றென்றும் கிறிஸ்துவுக்குள் நிலைத் திருந்து கனிகொடுக்கும் வாழ்க்கை வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 4:6-7