புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 25, 2022)

ஐக்கியத்தை தவிர்த்துக் கொள்ளாதிருங்கள்

2 கொரி 13:11

கடைசியாக, சகோதரரே,சந் தோஷமாயிருங்கள், நற்சீர்பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிரு ங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்


பாடசாலையிலே இரண்டாந் தரத்திலே கல்வி கற்று வரும் சிறு பையனானவன், ஒரு நாள் காலையில் அவன் எழுந்ததும், தனக்கு வயிற்றுவலி யாக இருக்கின்றது என்று தன் பெற்றோரிடம் கூறினான். அவர்களும், அவனுடைய அழுகையைக் கண்டு, சரி இன்று நீ வீட்டிலே இரு, வயிற்று வலி அதிகரித்தால் வைத்தியரிடம் செல்லலாம் என்று கூறினார்கள். ஆனால், அந்த வயிற்று வலி இர ண்டு மணித்தியாலத்திற்குள்; மாறிவி ட்டது. இப்படியான சம்பவம் ஒரு சில தடவைகள் நடந்து முடிந்தது. அவனுடைய வகுப்பு ஆசிரியர் பெற் றோரை அழைத்து அவர்களோடு பேசினார். ஏன் உங்கள் பையனானவன், குறிப்பாக பரீட்சை நடக்கும் நாட் களிலே சமுகமளிக்கத் தவறுகின்றான் என்று கேட்டார். உடனடியாக பெற்றோர் விழிப்படைந்தார்கள். வீடு சென்றதும், மகனானவனை அழை த்து அவனோடு பேசினார்கள். அதற்கு அவன் மறுமொழியாக: பரீட்சை எழுதினால் புள்ளிகளை போட்டு தரப்படுத்துவார்கள், புள்ளிகள் குறைந்தால் எனக்கு ஒரே பிரச்சனையாக இருக்கின்றது, எனவே பரீட்சை எழுதாவிட்டால் இந்த பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க தேவையில்லை என்று கூறினான். தனக்கு விளங்காத பாடங்களை கற்று, மேல திக உதவிகளை பெற்று பரீட்சையில் சிறந்து விளங்க வேண்டும் என் பதற்கு பதிலாக அந்த சிறுபையனுடைய அறிவுக்கு எட்டியது அவ்வளவுதான். இவ்வண்ணமாகவே, இன்று சிலர் சபைக்கு சென்றால் தான் மற்றவர்களோடு பேசிப் பழக வேண்டும். பேசிப் பழகினால், கருத்து முரண்பாடுகள் உண்டாகும். எனவே, சபை ஒன்றுகூடல்களை தவி ர்த்து நேரலையில் பங்குபெற்றினால் பிரச்சனைகள் இல்லை அல்லது ஆராதனைக்கு போவதும் வருவதுமாக இருந்தால் போதும். எவரோ டுமே பேசாதிருந்தால் பிரச்சனை இல்லை என்று தங்கள் அறிவுக்கு எட்டியபடி தீர்மானங்களை எடுத்துக் கொள்கின்றார்கள். நாம் இப்படி இரு க்கலாகாது. நாம் சபை ஐக்கியத்திலே மற்றவர்களோடு பழகும் போது, நம்முடைய குறைகளை ஆராய்ந்து பார்த்து, அவைகளை சீர்செய்து கொள்ள வேண்டும். மன்னித்து மறக்க பழகிக் கொள்ள வேண்டும். யாவருமே தேவனுடைய பிள்ளைகள் என்ற எண்ணத்திலே எல்லோரும் வளர வேண்டும் இப்படியாக நாம் பரீட்சைக்கு நின்று நமது பெலவீனங்களை வேத வாக்கியங்களின்படி ஜெயம் கொள்ள கற்றுக் கொள்வோமாக

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, என்னை நோக்கி வரும் சவால்களையும், கருத்து முரண்பாடுகளையும் தவிர்த்துக் கொள்ள வழிதேடாமல்,உம்முடைய வார்த்தையின்டி அவைகளை ஜெயங் கொள்ள என்னை வழி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:3