தியானம் (கார்த்திகை 24, 2022)
சத்திய மார்க்கத்தார்களாயிருங்கள்
1 யோவான் 2:5
அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்;
ஒரு ஐசுவரியமுள்ள மனுஷக்கு மூன்று குமாரர்கள் இருந்தார்கள். அந்த அவர்கள் குமார்கள் மூவருமே தாங்கள் தங்கள் தகப்பனானவருடைய வழிநடத்துதலுக்கு தங்களை முற்றாக ஒப்புக் கொடுத்திருக்கின்றோம் என்று பலர் முன்னிலையிலே, பகிரங்கமாக அறிக்கை செய்து கொள் வார்கள். அவர்களில மூவருடைய குற்றங்களையும் தகப்பனானவர் வீட் டிலே கண்டிக்கும் போது, அவர்க ளில் மூத்தவன், தன் குற்றங்களை எப்போதுமே ஏற்றுக் கொண்டு, மனம் வருந்தி, மனந்திரும்புகின்றவனாக இருந்தான். இரண்டாது குமாரன்: குற்றஙக்ளை ஏற்றுக் கொள்வான் மனம்வருந்திக் கொள்வான் ஆனால் மனந்திரும்ப மனதில்லாதவனாய் வாழ்ந்து வந்தான். இளைய குமாரனானவன்: தன் செயல்களை நியா யப்படுத்தும்படி எப்போதும் தன் தகப்பனானவரோடு விவாதம் செய்து கொள்வான். இவர்கள் மூவரும் உங்கள் பிள்ளைகளாக இருந்தால், இவர்களில் எந்தப் பிள்ளையானவன், தன் வாயின் அறிக்கையிலும், தன் இருதயத்தின் தியானத்திலும் உண்மையுள்ளவனாக இருப்பான்? இப் பிள்ளைகளில் எந்தப் பிள்ளையில் நீங்கள் பிரியமுள்ளவர்களாக இருப் பீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள். எந்த தயக்கமும் இல்லாமல் தங் களை ஐசுவரியவானின் குமாரர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு முந் திக் கொண்டார்கள். ஏனெனில் அவர்கள் தகப்பனானவருடைய சொத்து க்களிலே பங்குள்ளவர்களாக இருக்க மனவிருப்பமுள்ளவர்களாக இருந் தார்கள். ஆனால், அவர்களில் இருவர் தங்கள் தகப்பனுடைய வழி யிலே தங்கள் மனதார செல்ல விரும்பமில்லாதவர்களாக இருந்தார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, நாமும் நம்மை தேவாதி தேவனு டைய பிள்ளைகள் என்று சொல்லிக் கொள்வதற்கு முந்திக் கொள்கி ன்றோம். நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதி னாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாரு ங்கள். ஆனால், நாம் அந்த மூன்று குமாரர்களிலே எந்தக் குமாரனைப் போல வாழ்கின்றோம். அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள் ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவ னுக்குள் சத்தியமில்லை. அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிற வனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவரு க்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
ஜெபம்:
அன்பின் பிதாவே, தகுதியற்றவனாகிய என்னையும் மகா உன்ன தமான சுதந்திரத்திற்கு பங்காளியாக்கியிருக்கின்றீர். அதை உணர்ந்து என் மனப்பூர்வமான உம் வழியில் நடக்க உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 19:12-14