புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 23, 2022)

செம்மையான வம்சத்தார்

சங்கீதம் 112:1

அல்லேலூயா, கர்த்தருக் குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.


இந்த உலகிலே மனிதர்களுக்கு நன்மையாக தோன்றுகின்ற பல வழி கள் உண்டு. அந்த வழிகள் நம் வாழ்வில் நன்மையை உண்டுபண்ண வேண்டுமானால், அவை நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும், நாமோ தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு கட்டுப் பட்டவர்களாக வாழ வேண்டும். அப்படியாக நாம் நம்முடைய மாம்ச எண்ணங்களுக்கு இடங்கொடாமல், தேவ வழிநடத்துதலுக்கு கட்டுப்பட்டி ருக்கும் போது, உண்மையிலே நன் மையான வழி எதுவென்பதை நாம் அறிந்து கொள்வோம். இந்த உலகிலே வாழும் வரை நாம் நம்முடைய பிழைப்புக்காக பல காரியங்களை கற்கின்றோம், பல செயற்பாடுகளை செய்து வருகின்றோம். ஒரு வேளை நாம் கல்வியிலே சிறந்தவர்களாக இருந்தால், நாம் ஆண்டவர் இயேசுவின் வழியில் செல்லும் போது, அந்தக் கல்வி அறிவானது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால், நம்முடைய வாழ்வில் பிரயோஜனத்தைக் கொடுக்கும். ஆனால், கல்வியை தங்கள் வாழ்வில் உயர்த்தி அதை தங்கள் தெய்வமாக வைத்திருக்கின்றர்களுக்கு அந்த கல்வியானது கண்ணியாக மாறிவிடும். ஒரு வேளை, நமக்கு தாரளமான செல்வம் உண்டாயிருந்தால், நாம் நம்முடைய வாழ்வை முற்றும் முழுவதுமாக தேவ வழிநடத்துதலுக்கு ஒப்புக் கொடுக்கும் போது, நாம் சோதனையிலும் கண்ணியிலும், மனு ஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழாத படிக்கு நம்மை காத்துக் கொள்வோம். கிறிஸ்துவை அறிந்த பின்னும் ஒருவன், தன்னுடைய குடும்ப, குல கோத்திரத்தை குறித்து மேன்மைபாராட்டுகின்றவனாக இருந்தால், அவன் அழிவுக்குரியவைகளை இச்சித்து அவைகளையே தன் வாழ்வின் மேன்மையாக வைத்திருக்க்கின்றவனாக இருப்பான். இப்படி ப்பட்ட மேன்மை பாரட்டுதலினாலே மனிதர்களுடைய வாழ்விலே பெரு மையும், அகங்காரமும், மேட்டிமையுமேயன்றி வேறொன்றும் உண்டாவதில்லை. பெருமையுள்ளவர்களுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கின்றார். அழிவுக்கு முன்னானது அகந்தை. விழுதலுக்கு முன்னானது மனமேட் டிமை. பிரியமானவர்களே, கர்த்தருடைய வழியே செம்மையான வழி. அந்த வழிக்குட்பட்டிராத எந்தக் கொள்கைகளையும், தத்துவங்களையும் நம் சிந்தையைவிட்டு அகற்றிவிட்டு, செம்மையான வம்சத்தார்களாக கர்த்தருடைய நித்திய வழியிலே முன்னேறிச் செல்வோமோக.

ஜெபம்:

தேவனாகிய கர்த்தாவே, என்னுடைய மனதின் வழிகளின்படியல்ல, உம்முடைய கட்டளைகளின் வழியிலே நான் பிரியப்படுகின்றவனாக இருக்கும்படிக்கு பிரகாசமுள்ள இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 12:50