புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 22, 2022)

ஆளுகை

2 பேதுரு 2: 19

எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே.


இந்த உலகிலே மனிதர்கள் எவற்றை தங்களுடைய மேன்மை என்று கருதி, தங்கள் வாழ்க்கையிலே பொக்கிஷமாக காத்துக் கொள்கின்றார் களோ, அந்த காரியமானது, அவர்ளை சுற்றி ஒரு எல்லையை போட்டு விடுகின்றது. கல்வியே தன் வாழ்வின் மேன்மை என்று கருதுகின்றவனு டைய வாழ்க்கையிலே கல்வியே அவனை ஆளுகை செய்வதால் அவன் அதற்கு கட்டுப்பட்டிருக்கின்றான். சமுக அந்தஸ்தே தன் வாழ்வின் மேன்மை என்று எண்ணுகின்றவன், அதன் ஆளுகைக்கு உட்பட்டிருப்ப தால், அவனுடைய செயற்பாடுகள் யாவும் அதற்குள் மட்டுப்படுத்தப் பட்டிருக்கும். இப்படியாக மனித ர்கள் கல்வி, செல் வம், குடும்பம், கோத்திரம் ஜாதி மதம் அந்தஸ்து போன்றவைகள், தங்களை ஆளுகை செய்ய இடங் கொடுக்கின்றார்கள். தாங்கள் அவற்றிற்கு அடிமைகளாக இருக்கின்றோம் என்று அறியாமலும், அவைகளால் தங்களுக்கு உண்டா யிருக்கும் குறுகின பார்வையை உணராமலும் அவைகளை தங்களு டைய மகுடங்கள் என்று கருதி இவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். விஞ் ஞானம், தொழிநுட்பம் என்று இந்த உலக கல்வியினால் உண்டாகும் ஞானத்திற்கு அடிமைகளாக இருக்கினறவர்களை மனிதர்கள் மேன்மைப் படுத்துகின்றார்கள். அவைகளால்; இந்த உலகிலே யாவருக்கும் ஒரு சில நன்மைகள் உண்டு என்பதை நாம் நிராகரிக்க முடியாது. ஒரு ஊரிலே உலக ஞானத்தின் வட்டத்திற்குள் வாழும் மனிதனும், மதுபான வெறி கொள்ளுதலுக்கு அடிமையாக இருக்கின்ற இன்னுமொரு மனித னும் வாழ்ந்து வந்தார்கள். அந்த ஊரார், உலக ஞானத்தினால் நிறைந் தவன் தன்னை சன்மார்க்கன் என்றும், மதுபான வெறியினாலே கலகங் களை உண்டு பண்ணும் மனிதனை துன்மார்க்கன் என்றும் வகையறுத் தார்கள். இந்த உலக நியதியின்படி அதிலே உண்மை உண்டு. ஆனால், ஒருநாள் இருவரும் மரணத்தை சந்திக வேண்டும். இவருவமே கிறிஸ்து வின் ஆளுகைக்கு உட்டபட்டவர்களாக இல்லாதிருந்தால், அவர்கள் ஆத்து மாவிற்கு என்ன நன்மை உண்டாகும்? இருவருமே தங்கள்; தங்கள் மாம்ச இச்சையின்படி உலக ஞானத்தை மேன்மைப்படுத்தி, மெய்தேவனாகிய கர்த்தரை அறியாது வாழ்ந்து வந்தார்கள். பிரியமான வர்களே, எவை உங்கள் வாழ்க்கையை ஆளுகை செய்கின்றது? கிறிஸ் துவின் ஆளுகைக்கு உட்டபட்டுகின்றவர்களாக இருங்கள். அப்போது நீங்கள் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவீர்கள். முடிவிலே நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வீர்கள்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, இந்த உலகத்திலே உண்டான வைகள் என்னை ஆளுகை செய்யாதடிக்கும் என்னை நான் அவைகளுக்கு ஒப்புக்கொடுக்காதபடிக்கும் எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:4-11