புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 21, 2022)

ஜீவ வழியை தள்ளிப்போடாதிருங்கள்

ஏசாயா 30:13

இந்த அக்கிரமம் உங்களுக்கு உயர்த்த சுவரில் விழப்பிதுங்கிநிற்கிறதும், திடீரென்று சடிதியாய் இடியப்போகிறதுமான வெடிப்பைப்போல இருக்கும்


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த சில மனிதர்கள், இரவு நேரத்திலே மதுப hனம் அருந்தி, வெறி கொண்டவர்களாக வீடு திரும்பும் போது, வீணான வார்த்தைகளை பேசுகின்றவர்களாயும், தங்களுக்கு ஆலோ சனை கூறும் மனிதர்களை கொள்ளையடிக்கின்றவர்களாயும்;, தெருவிலே இருக்கும் மின்குமிள்; விளக்குகளை உடைத்துப் போடுகின்றவர்களுமாகவும் இருந் தார்கள். இந்த செய்கையானது, துன் மார்க்கரான அவர்களுக்கு பரபரப்பும், ஊரார் மத்தியிலே தங்களைக் குறித்த பயம் இருப்பதால், அது அவர்களுக்கு அகங்காரத்தையும் பெருமையையும் பெருகச் செய்தது. இவ்வண்ணமாக தெருவிள்ள மின்குமிள்களை உடைத் துப் போட்ட அவர்கள், ஒருநாள் அமா வாசையன்று வீடு திரும்பும் போது, பாதையிலே தடுமாறி சென்று, அருகி லுள்ள பாழ டைந்த கிணற்றொன்றிலே விழுந்து விட்டார்கள். இவர்கள் பெரிதாக கூக்குரலிட்டு சத்தம் போட்டார்கள். அதை கேட்ட ஊரார் இவர்கள் இன்று அதிகமாக வெறித்திருக்கின்றார்கள் எனவே பெரிதான பொல்லாப்புக்களை தங்களுக்கு செய்வார்கள் என்று பயந்து வீட்டிற் குள்ளயே இருந்து விட்டார்கள். இப்படிப்யாக குடித்து, வெறித்து, ஆலோ சகர்களுக்கு அடித்து, சண்டை செய்து, அரச சொத்துக்களை சேதப்ப டுத்ததுகின்றவர்களை குறித்து என்ன சொல்லுவீர்கள்? இவர்கள் மதியீ னர்கள் என்று சிறு பிள்ளைகளும் சொல்வார்கள் அல்லவா? பிரியமா னவர்களே, இவ்வண்ணமாக, இந்த உலகிற்கு தேவ ஒளியாகிய நற் செய்தியை கொண்டு செல்லும் தேவனுடைய தாசர்களையும், தேவனு டைய பிள்ளைகளையும், இந்த உலகில் வாழும் பல மனிதர்களுக்கு செய்கின்றார்கள். சிலரை பகைத்து, வீண் வார்த்தைகளால் பேசி, நகை கின் றார்கள். வேறு சிலரை, அடித்து, ஊரைவிட்டு துரத்தி, அவர்களது உட மைகளை சேதப்படுத்துகின்றார்கள். இன்றும்கூட ஒரு சிலரை, கொன்று, தேவஆலயங்களை எரித்து விடுகின்றார்கள். இவர்கள் மதுபானத்தினால் மட்டும் வெறி கொண்டவர்கள் அல்ல, இவர்கள் தங்கள் ஜாதி, மத, அந் த ஸ்து, கல்வி, ஆதாயத்தொழில் போன்றவற்றால் மதிமயங்கியவர்களாக இருப்பதால், வாழ்க்கையின் மெய்யான ஒளியாகிய ஆண்டவர் இயேசுவை தள்ளிவிடுகின்றார்கள். இவர்கள் தேவ வார்த்தையை வெறுத்து, இடுக்க மும் தாறுமாறும் செய்கிறதை நம்பி, அதைச் சார்ந்து கொள்ளுகிறபடி யால், தங்களுக்கு சடுதியான அழிவை தாங்களே முன்குறிக்கின்றார்கள். நீங்களோ அசையாமல் தேவஊழியத்திலே உறுதியாய் தரித்திருங்கள்.

ஜெபம்:

நித்திய வாழ்விற்கு செல்லும் வழிகாட்டியாகிய தேவனே, நான் எப்போதும் உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்திலே நடக்கும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எரேமியா 2:13