புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 20, 2022)

தேவன் எங்கே?

ஏசாயா 59:2

உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.


ஒரு நாளின் நண்பகல் வேளையிலே, வானத்திலே தீரென்று கார் மேக ங்கள் சூழ்ந்து கொண்டது. அது பகல் நேரமாக இருந்த போதிலும், அந் தகாரம் சூழ்ந்து கொண்டது போல காட்சியளித்தது. அந்நாளில் புயல் காற் றுடன் இடிமுழங்கியதைக் கண்டு கொண்ட ஒரு சிறுமியானவள், கலக்க மடைந்தவளாய், தன் தந்தை யை அணைத்துக் கொண்டு, அப்பா, பகல் நேரமல்லவா, ஏன் சூரியனைக் காணவில்லை. அது எங்கே போய் விட் டது என்று கேட்டாள். தந்தையானவர், அவளை அணைத்து, தன் மடியில் வை த்து, மகளே, இது பகல் நேரம்தான். சூரியன் எங்கும் போகவில்லை. வானி லே கார்மேகங்கள் சூழ்ந்திருப்பதால், சூரியனானது நம்முடைய கண்களுக்கு மறைக்கப்பட்டிருக்கின்றது என்று பதில் கூறினார். இந்த சந்தர்ப்பத்திற்கு ஒத்ததாகவே, இன்று பல மனி தர்கள் தேவன் எங்கே? அவருடைய செயல்கள் எங்கே? உலகிலே இத் தனை துன்பங்களா? என்று தேவனைக் குறித்து பல விதண்டாவாதமான கேள்விகளைக் கேட்கின்றார்கள். தேவனுக்கு விரோதமான செயல்களை இன்னும் அதிகமாகவும் துணிகரமாகவும் செய்கின்றார்கள். இவர்கள் பாவத்திலே நிலைத்திருக்க விரும்புவதால், மனிதர்களுடைய மனதைப் பிரகாசிக்கும் தேவ ஒளிதனை உணர முடியாமல், இவர்கள் மனதிலே காரிருள் சூழ்ந்து கொள்கின்றது. ஒளியானது உலகத்திலே வந்திரு ந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாத வைகளாயிருக்கிறபடியி னால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிரு க்கிறது (யோவான் 3:19). இப்படி ப்பட்டவர்களுடைய விசுவாச் மனக்க ண்கள் குருடாக்கப்பட்டிருப்பதால், தாங்கள் காரிருளிலே நடக்கின்றார்கள் என்பதைகூட உணர முடியாமல் வாழ்வதோடு, மற்றவர்களின் ஆத்துமாவையும் இடறப் பண்ணுகின்றா ர்கள். ஆண்வர் இயேசு: ஒருவன் இரவிலே நடந் தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான் என்றார். (யோவான் 11:10) பிரியமானவர்களே, ஆண்டவராகிய இயேசுவின் விலைமதிக்க முடியாத இரதத்தினால் பாவமறக் கழுவப்பட்டவர்களே, நீங்களெல்லாரும் வெளி ச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே. தேவன் நம்மைக் கோபா க்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறி ஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற் கென்று நியமித்தார். எனவே, தெளி ந்த புத்தியுள்ளவர்களாக இருக்கக் கடவோம்.

ஜெபம்:

ஜீவ ஒளியாகிய தேவனே, பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு நம்பிக்கையிலே நிலைத்திருக்கும் படி பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தெச 5:1-10