தியானம் (கார்த்திகை 19, 2022)
ஞான இருதயத்தை நாடுங்கள்
சங்கீதம் 2:12
அவரை அண்டிக்கொள்ளுற யாவரும் பாக்கியவான்கள்.
தன் வாழ்க்கையிலே இவர் எடுத்த சில முக்கிய தீர்மானங்கள் தவறானவைகள். தன்னுடைய பொருளாதாரத்தை இவர் கையாண்ட முறை கள் சிறந்தவைகள் அல்ல. எங்கள் குடுத்பத்தில் நாங்கள் எதிர் நோக்குகின்ற சில பிரச்சனைகளுக்கு இவைகளே காரணம் என்று ஒரு மனி தனானவன், தன் தகப்பனானவரைக் குறித்து, தன் சிறு பிராயத்திலிரு ந்து இத்தகைய அபிப்பிராயமுள்ளவனாக இருந்து வந்தான். அவன் தன் தகப்பனை அண்டி, அனுபவத்;தையும், அறிவையும் வளர்த்துக் கொள்வதற்கு பதிலாக, தன் தகப்பனைவிட தான் ஞானமுள்ளவன் என்று பெரு மையுள்ள உள்ளம் கொண்டான். தகப்பனானவரோ தன் ஸ்தானத்திலிருந்து எதிர்நோக்கும் காரியங்களை அறிந்து கொள்வதற்கு அவனுக்கு அறிவோ, அனுபவமோ, பெலனோ அந்நாளில் அவனுக்கு இருக்கவில்லையென அறிந்து, அந்தத் தகப்பனானவர், காலம் அவனுக்கு பதில் சொல்லும் என்று மௌனமாக இரு ந்தார். காலங்கள் கடந்து, அந்த இளைஞனானவன் தன்னுடைய தகப்ப னானவனுடைய ஸ்தானத்திற்கு வந்தபோது, தான் தன்னுடைய தகப்பனானவனரைக் குறித்து தப்பான எண்ணங் கொண்டேன் என்பதை அறி ந்து மனவேதனைப்பட்டான். இப்படியாக ஒரு மனிதனுக்கும் தன்னோடு வாழும் இன்னுமொரு மனிதனுடைய உண்மையான நிலைமையின் ஒரு பகுதியைக்கூட அறிந்து கொள்ள முடியாது இருக்கின்ற போது, தங்கள் சமுகத்தில், சபையில், பட்டணத்தில், நாட்டில் மற்றும் உலகிலுள்ள அதி காரங்களைக் குறித்து விமர்சிக்கி ன்றார்கள். அதாவது, தாங்கள் அப்படி ப்பட்ட அதிகாரத்தில் இருந்தால், எல்லாவற்றையும் சிறப்பாகவும், இல குவாவும்; செய்து முடித்து விடுவார்கள் என்பதே இத்தகையவர்களு டைய எண்ணமாக இருக்கின்றது. மனிதர்கள் அந்த அளவோடு தங்கள் விமர்சனங்களை நிறுத்தி விடவில்லை. அதற்கு மேலாக தங்கள் எண் ணங்களை உயர்த்தி, சர்வ வல்லமையுள்ள தேவாதி தேவனின் ஆளு கையைக் குறித்து கேள்விகளை கேட்டு, அவரையும் நியாயந்தீர்க்கும் மதியீனர்களாக மாறிக் கொண்டு போகின்றார்கள். பாக்கியம் பெற்றவர் களே, தேவாதி தேவ னுக்கு பயந்திருங்கள். பயபக்தியுடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள் அவருக்கு முன்பாக இரு தயத்தை தாழ்த்தி, அவருடைய திவ்விய வார்த்தைகளை தியானியுங் கள். பொறுமையாயிருங்கள், கற்றவைகளை கைக்கொள்ளுங்கள் அப் போது அவரை அறிகின்ற அறிவிலே நீங்கள் வளர்ந்து பெருகுவீர்கள்.
ஜெபம்:
சர்வ வல்லமையுள்ள தேவனே, உமக்கு விரோதமாக நான் என் இருதயத்தை ஒருபோதும் கடினப்படுத்தாதபடிக்கு, உம்முடைய வார்த் தைகளின் வழியிலே நடந்து ஞானமுள்ளவனாக மாற கிருபை செய் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 தீமோ 6:15-16