புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 18, 2022)

சொன்னதைச் செய்து முடிப்பார்

யோசுவா 21:45

கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.


ஒரு தேசத்தை அரசாண்டுவந்த ராஜாவானவன், குறிப்பிட்ட ஊருக்கு சென்று அங்கேயுள்ள குடிவாசிகளை சந்திப்பதாக வாக்குகொடுத்தி ருந்தான். அந்த ஊரானது, அந்தத் தேசத்தில் வாழ்ந்த பலராலும் விரு ம்பப்படாத ஊராக இருந்தபோதிலும், ஊரின் குடிகள் மத்தியிலே விரு ம்பப்படாத காரியங்கள் நடந்து வந்த போதிலும், அந்த ராஜாவானவன் தான் கொடுத்த வாக்கிலே உண்மையுள்ளவனாக இருந்து அதை நிறை வேற்றினான். இப்படி யாக மனிதர் களில் சிலர், அவர்கள் பெலனும் அதி காரமும் மட்டுப்படுத்தப்பட்டதாக இரு க்கின்ற போதிலும் தாங்கள் கொடு த்த வாக்கை நிறை வேற்றுகின்றா ர்கள். மேலே குறிப்பிடப்பட்ட ஊரி லிருந்த குடிமக்கள், ராஜானவானவ னின் வாக்குக்கு தகுதியற்றவர்க ளாக இருந்த போதிலும், ராஜாவா னவன் தான் கூறிய வார்த்தையை மேன்மைப்படுத்தியிருந் தான். இவ் வண்ணமாக வாழ்நாள் குறைந்தவர்களும், மட்டுப்படுத்த ப்பட்ட பெலனு ள்ளவர்களும்தாங்கள் பேசிய வார்த்தையை நிறைவேற் றுகின்றவர்க ளாக இருந்தால், நாம் துன்மார்க்கரும், அக்கிரம செய்கைக் காரருமாயிரு ந்தபோது, தம்முடைய ஒரே பேறான குமாரனை, நமது மீட்புக்காக கொடுத்த, வாக்குமாறாத தேவாதி தேவன், அவர் நமக்கு கொடுத்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றாமல் இருப்பாரோ? ஒருபோதும் இல்லை, பொய் சொல்ல அவர் ஒரு மனிதனல்ல. அவர் தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவது அதிக நிச்சயமாயி ருக்கின்றது. இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனேகூட இருப்பேன் என்றும், நான் உங்களை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை என்றும், நான் உங்களை திக்கற்றவராகவிடேன் என்றும் உரைத்த கிருபை நிறைந்த தேவனானவர், நாம் தவறிப் போனாலும், அவர் தவறாமல், தாம் விளம்பிய வார்த்தைகளை நிறைவேற்றுகின்றவராயிருக்கின்றார். நம்முடைய நீதியின் கிரியைகளின் நிமித்தமல்ல, நம்முடைய தியாக ங்கள் ஒறுத்தல்களின்படியுமல்ல, தம்முடைய மிகுந்த கிருபையின் படியே நம்மேல் நோக்கமுள்ளவராக இருக்கின்றார். நாம் அவரைத் தேடாத நாட்களிலும், அவரை கூப்பிடாத வேளைகளிலும் கூட, நம்மை போஷpத்து, வழிநடத்தி வந்த தேவன் அவர். எனவே, திடன் கொள்ளு ங்கள். அழைத்தவர் உண்மையுள்ளவராயிருக்கின்றார்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, உமக்கு விரோதமாக நான் என் இருதயத்தை ஒருபோதும் கடினப்படுத்தாதபடிக்கு, உம்முடைய வார்த் தைகளின் வழியிலே நடந்து ஞானமுள்ளவனாக மாற கிருபை செய் வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலி 1:28-30