புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 16, 2022)

நம் பெலன் குறைந்து போகும் நாளில்...

எபிரெயர் 13:5

நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.


பொதுவாக கடற்தொழிலை செய்து வரும் மனிதர்கள், கடலிலே அதிக நேரத்தை செலவிடுவதால், பலவித புயல் காற்றுக்கள், கார்மேகங்கள் சூழ்ந்த இராத்திரிகள், கடல் கொந்தளிப்புக்கள் என்று பல பயங்கரமான சூழ்நிலைகளை சந்திப்பதால், அவைகளை குறித்து மிகுந்த அனுபவமுள்ளவர்களாக இருப்பார்கள். ஆண்டவர் இயேசுவின் சீஷர்க ளாகிய, பேதுரு, அந்திரேயா, யோவான், யாக்கோபு போன் றவர்கள் அத்தகைய அனுபவ மிக்கவர்களாக இருந்திருப்பார்கள். ஆனால், ஒருநாள் அவர்கள் படவிலே சென்று கொண்டிருந்த போது, ஆண்டவர் இயேசு பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார். பல த்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று. அதைக் கண்ட சீஷர்கள் யாவரும் கலக்கமடைந்து. ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள். இவ்வண்ணமாகவே, ஆண்டவர் இயேசுவை அறிந்து, இரட்சிக்கப்பட்டு அநேக வருடங்கள் அனுபவமிக்க பழுத்த விசுவாசிகளாக இருக்கின்றவர்களும், பெரிய ஊழியர்களாக இருக்கின்றவர்களும், ஒரு போதும் காணாத கடும்புயல் போன்ற சில சூழ்நிலைகள் குடும்பத்தையோ, சபையையோ தாக்கும்போது, ஆண்டவருடைய ஆதி சீஷர்களைப் போலவே பயந்து கலக்க மடைந்து போய்விடுகின்றார்கள். அந்த வேளையிலே ஆண்டவர் இயேசு நம்மை அழைத்த அழைப்பையும், அவர் கொடுத்த திருப்பணியையும், திவ்விய வாக்குத்தத்தங்களையும், தரிசனங்களையும், தீர்க்கதரிசனங்களையும் முற்றாகவே மறந்து போய்விடுகின்றார்கள். அவர்கள் மாம்சத்தின் கண்களாலே பிரச்சனைகளை பார்ப்பதினாலே, மனக் கண்கள் மறைக் கப்பட்டுப் போவதால், மாம்சத்திலே செயற்பட்டு, ஒரு வேளை ஆண்டவர் இயேசு நான் போகும் பாதையை அறியாதிருக்கின்றாரரோ என்று அவிசுவாசிகளாகவே மாறி விடுகின்றார்கள். பிரியமானவர்களே, இக்கட்டும் நெருக்கமும் நம்மை சூழ்ந்து கொள்ளும் போது, மன திலே பயம் உண்டாகலாம். அந்த வேளைகளில், பதற்றமடைந்து வீண் வார்த்தைகளை பேசாமல், நீங்கள் கடந்து வந்த பாதையை திரும்பிப் பாருங்கள். தகப்பனைப்போல நம்மை தோளில் சுமக்கின்ற தேவன் நம்மோடு இருக்கின்றார். அவர் நம்மை ஒருபோதும் கைவிடார். நம்மை விட்டு விலகிப் போகவுமட்டார்.

ஜெபம்:

என்னை வழுவாமல் காத்துக் கொள்ளும் தேவனே, பயங்கரங்கள் என்னை சூழ்ந்து கொள்ளும்போது, உம் வார்த்தையில், நான் நிலை த்திருக்கும்படி பிரகாசமுள்ள மனக் கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தெச 5:24