புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 15, 2022)

மனிதனுடைய ஆக்கங்கள்

சங்கீதம் 146:5

தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.


ஒரு நகரத்திலே இருந்த பழைய நகரசபை கட்டிடத்தைவிட்டு, புதிதும், பெரிதுமான கட்டிடமொன்றை கட்டும்படிக்கு அங்கத்தவர்களால் தீர்மானம் எடுக்கப்பட்டது. தேசத்திலுள்ள அதி சிறந்ததும், மிகவும் தேர்ச்சியும், அனுபவமுமுள்ள பொறியியல் வடிவமைப்பாளர்களுள்ள விசேஷpத்த குழுவொன்று தெரிவு செய்யப்பட்டது. அவர்களின் மேற்பார்வையின் கீழே கட்டிட மானது வடிவமைக்கபட்டு, கட்டிமுடி க்கப்பட்டது. மிகவும் அழகாக காட்சி யளித்த அந்த பெலமுள்ள கட்டிட அமைப்பு (Structure), ஜனங்களின் கண்களை கவர்ந்தது. அந்த ஊராரு க்கு, அந்தக் கட்டிடம் காற்றுக்கும், புயலுக்கும் ஒதுங்கும் சரணாலயம் போல இருந்தது. சில ஆண்டுகள் கடந்து சென்றதும், அந்த ஊரை தாக்கிய பயங்கரமான சுழல்காற்று, அந்தக் கட்டிடத்தில் மோதியடித்ததால், அந்த கட்டிடத்தின் முகப்பு உடைந்து, கூரைகள் தகர்ந்து போயிற்று. கட்டிடத்தில் ஏற்பட்ட பாதி ப்பை கண்ட அதிகாரிகளும், பொறியியலாளர்களும் பிரமித்தார்கள். அவர்களுடைய அறிவுத்திறனோ, அனுபவங்களோ அந்த சுழல்காற்று க்கு ஈடு கொடுக்க முடியாமற்போயிற்று. தங்கள் கைவேலையாகிய பிர மாண்டமான அந்த கட்டிடஅமைப்புக் குறித்து பெருமைபாரட்டி வந்த அவ ர்கள், தங்கள் பிரயாசம் சுழல் காற்றில் அகப்பட்டு உடைந்து போனதை அவர்களால் பார்த்துக் திகைக்க முடிந்ததேயல்லாமல், அவர்களால் ஒன் றும் செய்து கொள்ளமுடியவில்லை. ஆம் பிரியமானவர்களே, மனிதர்க ளுடைய ஆக்கம் முற்றாக பயனற்றது என்பது பொருள் அல்ல. ஆனால், எந்த மனிதனுடைய பெலத்தினாலும் கட்டுபடுத்த முடியாத சவால்களு க்கும் மனிதர்கள் முகங் கொடுக்க வேண்டிய நேரங்கள் உண்டு. மனி தனானவன் இந்தப் பூமியிலே எப்படி நிலையற்றவனாக இருக்கின் றானோ, அப்படியே அவனுடைய ஆக்கங்களும் இருக்கின்றது. ஒரு வேளை அவனுடைய எண்ணங்கள் நன்மையானவை களாக இருந்தா லும், அவனுடைய பெலன் குன்றிப் போகும் நாட்கள் சீக்கிரமாய் கடந்து வருகின்றது. அவனுடைய வாழ்நாட்கள் இந்தப் பூமியிலே மட்டுப்படத் தப்பட்டிருக்கின்றது. அவனுடைய ஆக்கங்களும் அப்படியே இருக்கி ன்றது. பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனை யும் நம்பாதேயுங்கள். அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம். யாக்கோபின் தேவனைத் தன் துணை யாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.

ஜெபம்:

என் கன்மலையும் என் மீட்பருமாகிய தேவனாகிய கர்த்தாவே, நீரே நிரந்தமானவரும், என்னுடைய நித்திய அடைக்கலமுமானவர் என்பதை உணர்ந்து, எப்போதும் உம்மைச் சார்ந்து வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 127:1-2