புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 14, 2022)

புயலடிக்காத படகை தேடுகின்றீர்களா?

யோவான் 16:33

உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.


ஒரு உத்தியோகஸ்தன், தன் வேலையலுவலாக மாதந்தோறும், கடலொ ன்றை கடந்து, தீவொன்றிற்கு சென்றுவர வேண்டியதாக இருந்தது. முதல் முறையாக அவன் அந்த கடலை கடப்பதற்காக துறைமுகத்திற்கு சென்று, அங்கிருந்த படகொன்றிலே ஏறிக்கொண்டான். படகோட்டி அந்த படகை ஓட்டிக் கொண்டு செல்லும் போது, நடுக் கடலிலே, காற்று பலமாக வீசி யதால், பெரும் அலைகள் படவிலே மோதிற்று. படகு கடும் காற்றிலே அகப்பட்டதால், காற்றுக்கு எதிர்த்துப் போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே போயிற்று. அதைக் கண்ட அந்த உத்தியோகஸ் தன், மிகவும் பய ந்து போனான். படகோட்டி, அந்த காற் றின் மத்தியிலும், படகை கட்டுப்படு த்தி, சென்றடைய வேண்டிய துறை முகததிற்குகொண்டு சென்றான். அந்த உத்தியோகஸ்தன் படகை விட்டு இறங்கும் போது அந்தப் படகோட்டியை நோக்கி: இந்த படகிலே ஏறியது என்னுடைய குற்றம். உனக்கு படகை ஒழுங்காக ஓட்டிச் செல்ல தெரியாது என்று அவனை கடிந்து கொண்டான். ஆனால், அந்தப் பட கோட்டி எதை யுமே பேசாமல் மௌனமாக இருந்தான். அடுத்த மாதத் திலே, அதிக பணம் கொடுத்து, கப்பலொன்றிலே ஏற்றிக் கொண்டான். அதிலே நூற்றுக் கணக்கான பயணிகள் இருந்தார்கள். கப்பல் சற்று தூரம் சென்றதும், புயல் காற்று கப்பலில் அடித்தது. கப்பல் சரிந்து தண்ணீரில் தாழ்ந்துவிடுவது போல அசைந்தது. மிகவும் பீதியுற்ற அந்த உத்தியோகஸ்தன், கப்பலின் அதி பதியை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அதற்கு அங்கிருந்தவர்கள், இந்த கப்பலிலே உன் னைப் போல நூற்றுக் கணக்கான வர்கள் இருக்கின்றார்கள். எல்லோ ரும் தாங்கள் நினைத்தபடி அதிபதியை சந்திக்க முடியாது. மற்றவர்கள் மௌனமாக இருப்பது போல நீயும் போயிரு என்று அவனை அதட்டினா ர்கள். அந்த வேளையிலே, அந்த உத்தியோகஸ்தன், கப்பலுமல்ல, கப் பலோட்டியுமல்ல, கடலிலே புயல் வருவது சகஜம் என்பதை உணர்ந்து, தான் கடந்த முறை படகோட்டியையை கடிந்து கொண்டதையிட்டு மன வருத்தப்பட்டான். பிரியமானவர்களே, கடலாகிய உலகத்திலே, நம் வாழ் க்கைப் படகை ஓட்டிச் செல்கின்றோம். நாம் எந்த சபையிலிருந்து தேவனை சேவித்தாலும், நம் படகிலே புயல் காற்று அடிக்கும். இந்த உலகத்திலே நமக்கு உபத்திரவங்கள் உண்டு. அதைக் கண்டு, உங்களை நடத்துகின் றவர்களை கடிந்து கொள்ளாமல் தேவ வார்த்தையிலே பெலப்படுங்கள். கடும் புயலிலும் நம் ஆண்டவர் கரைசேர நமக்கு துணை செய்வார்.

ஜெபம்:

கலங்காதே திகையாதே என்று சொன்ன தேவனே, என் வாழ் க்கையை நோக்கி வரும் சவால்களை கண்டு நான் மற்றவர்களை கடிந்து கொள்ளாமல், உம்மை நோக்கி பார்க்க எனக்கு கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1-2