புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 13, 2022)

எல்லாம் நன்மைக்கே

யோவான் 14:23

ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்.


ஒரு ஊரின் கடைமுனையிலே வாழும் மனிதர்களில் சிலர் துஷ்டர்களும், வீணராகவும், ஊதாரிகளாவும் இருந்து வந்தார்கள். அந்த ஊரிலே வாழ் ந்த ஒரு குடியானவன், தன் மகனானவனிடம், ஊரின் கடைமுனைக்கு செல்ல வேண்டாம் என்று பலமுறை கூறியிருந்தார். ஒருநாள் அந்த மக னானவன், தன் தந்தையின் சொல்லை பொருட்படுத்தாமல், தன் நண்பர்களின் பேச்சைக் கேட்டு, கடைமுனையிலுள்ள கடற்கரைக்குச் சென் றான். துஷ;ட மனிதர்கள் அவர்களை பிடித்து, அடித்து, காயப்படுத்தி, அவர்களுடைய சைக்கிள் மற்றும் கைக்கடிகாரங்களை பறித்துவிட்டு, துரத்திவிட்டார்கள். இந்த சம்பவத்தை தியானிக்கும் போது, நம்மை அந்த மகனானவனுடைய இடத்திலே வைத்துப் நம்நிலைமையை சற்று ஆராய்ந்து பார்ப்போம். அந்த மகனாவனுடைய வாழ்க்கையிலே ஏற்பட்ட தீமைக்கு காரணம் என்ன? நம்முடைய வாழ்விலும், சில வேளைகளிலே தீமையான காரியங்கள்; நடை பெறுவண்டு. அதன் காரணமாக பின்மாற்ற மான மனநிலைமையும் உண்டாவதுமுண்டு. நம் வாழ்வில் நடக்கும் காரி யங்கள் எல்லாமே நன்மைக்கு ஏதுவாக நடைபெறு கின்றது என்று கூறிவிட முடியுமா? அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிற தென்று தேவனுடைய வார்த்தை கூறுகின்றது. (ரோமர் 8:26) எல்லோருக்கும் சகலதும் நன்மைக்கு ஏதுவாக நடக்கின்றதா? நன்றாக கவனியுங்கள் அது 'தேவனுடைய தீர்மானத்தி ன்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களு க்கே' அப்படி நடக்கின்றது. ஒரு வன் தேவனிடத்தில் அன்பாயிருக்கின் றான் என்று எப்படி அவன் அறிந்து கொள்ள முடியும்? ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். (யோவான் 14:23). மேலே குறிப்பிடப்பட்ட சம்பவத்திலே, அந்த மகனானவன், தன் தந்தையின் சொல் லுக்கு கீழ்படியாதவனாய், தனக்கு தீமையை வருவித்துக் கொண்டான். ஏனெனில் அவன் அறிவுரையை கைக்கொள்ளாது போனான். பிரியமான வர்களே, நாம் நம்முடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்து, தேவ வார்த்தைக்கு விரோதமாக நடந்த நாட்களுக்காக, மனம்வருந்தி, இனி உம்முடைய வார்த்தையின் வழியிலே நடப்பேன் என்று அறிக்கை செய்து மனந்திரும்பும் போது, கிருபை நிறைந்த பரமதந்தைதாமே, தக ப்பன் தன் பிள்ளைக்கு இரங்குகிறது போல நமக்கு இரங்கி தீமையிலி ருந்து நம்மை விடுவித்து, நன்மையான வழி யிலே நடத்திச் செல்வார்.

ஜெபம்:

நன்மையான வழியிலே என்னை நடத்தும் தேவனே, நீர் எல்லாம் அறிந்தவர். எல்லா சூழ்நிலைகளிலும் நான் உம்முடைய வாழ்வு தரும் வசனத்தை கைக் கொள்ளும்படிக்கு நீர் எனக்கு கிருபை செய்வீராக. இர ட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:3-4