தியானம் (கார்த்திகை 12, 2022)
சுயசரிதை
யோவான் 16:13
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;
தாத்தா நீங்கள் நாள்தோறும் ஓயாமல் ஏதோ எழுதிக்கொண்டிருக்கின் றீர்களே, அப்படி என்ன எழுதுகின்றீர்கள் என்று அவருடைய பேர்த்தியா னவள் கேட்டாள். அதற்கு வயதானவர்: நான் என்னுடைய அனுபவங்க ளை சாட்சிப் புத்தகமாக அச்சிட்டு வெளியிடடும்படிக்கு எழுதிகின்றேன் என்று கூறினார். அதற்கு அவள்: அனுபவசாட்சி என்றால் என்ன என் றாள். அதற்கு மறுமொழியாக அவர்: என் வாழ்க்கையின் சுயசரிதை. உன் னைப் போல நான் சின்ன வயதிலி ருந்து என் வாழ்க்கையிலே நடந்த வை களையும், நான் நடத்தியவைக ளை யும், அவற்றால் உண்டான பின் விளை வுகளையும், பலன்களையும், என் தெரி வுகளால் நான் சந்தித்த தோல்விகளை யும், தேவ ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு இடங் கொடுத்த நாட்க ளிலே பெற்ற வெற்றிகளையும் குறித்தவைகளே. ஆனால், நான் இப் போது என் கதையின் முடிவுக்கு வந்திருக்கின்றேன். ஆனால், நீயோ உன் கதையை ஆரம்பிக்கின்றாய், எனவே உன் வழிகளை கர்த்தருக்கு ஒப்பு வித்து அவருடைய வார்த்தையின்படி நடந்தால், உன் வழிகளிலே நீ புத் தியு ள்ளவளாய் நடந்து கொள்வாய். தேவ ஆவியானவர் உன் வாழ் வை நடத்த இடங்கொடு. அவரே சகல சத்தியத்திலும் உன்னை வழிந டத்துவார் என்றார். ஆம், பிரியமானவர்களே, நாங்கள் ஒவ்வொருவ ரும் எங்கள் வாழ்க்கையின் சுயசரிதையை எழுதிக் கொண்டிருக்கின் றோம். தேவனுடைய அழைப்பும், கிருபையும், வழி நடத்துதலும், வாக் குத்ததங்களும் உண்மையானவைகள். தேவன் தமது வாக்குத்தத்தத்தி ன்படி, நம்மை சகல சத்தியத்திலும் வழிநடத்தும்படி தேவ ஆவியான வரை நமக்கு கொடுத்திருக்கின்றார். ஒருவன் தன் சுய தீர்மானங்க ளிலே வாழ்பவனாக இருந்தால், அவனே தன் முடிவை நிர்ணயிக்கின் றான். தேவ ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு செவி கொடுகின்றவன், தேவ வார்த்தைக்கு கீழ்படிந்து நடப்பதால், அந்த ஜீவ வார்த் தைகளே அவனுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கின்றது. சில தேவ பிள்ளைகள் தங்கள் வாழ்விலே உண்டாகும் பின்னடைவுகளுக்கு மற்றவர்களே கார ணம் என்று எப்போதும் குற்றம் சாட்டிக் கொள்வார்கள். அது அவர்கள் எழுதும் அவர்க ளுடைய வாழ்வின் சுயசரிதை. ஆனால், தேவனுடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூரு கிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று தேவனு டைய வார்த்தை கூறுகின்றது. எனவே, தேவ வழிநடத்துதலுக்கு இடங்கொடுங்கள். உங்கள் முடிவு வெற்றயாக இருக்கும்.
ஜெபம்:
சத்தியபரராகிய தேவனே, என் சுய திட்டங்களின் படி நான் என் வழியை அமைத்துக் கொள்ளாமல், சத்திய ஆவியானவர் காட்டும் வழியில் நடக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யோவான் 14:23