புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 11, 2022)

சுய அனுதாபங்களை விட்டுவிடுங்கள்

மத்தேயு 11:28

இயேசு: நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.


குற்றமொன்றிலே அகப்பட்டு, நீதிமன்றத்திலே, நீதிபதியின் தீர்ப்புக்காக ஒரு குற்றவாளியொருவன் காத்திருந்தான். விசாரணைகளுக்கு பின்பு, நீதிபதி அவன் நிலைமையைக் கண்டு, கரிசனையுள்ளவராக, நீ ஏன் உன் வாழ்நாட்களை வீணடித்து, நோய் கொண்டவனாய், குற்றங்களுக்குமேல் குற்றங்களை செய்து, உன் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கின்றாய் என்று கேட்டார். அதற்கு அவன் மறுமொழியாக: என்னை என் பெற்றோர் அன்புகாட்டி வளர்க்கவில்லை அதனால் வீட்டைவிட்டு வெளியேறினேன். என் வாழ்வில் நான் ஒழு க்கமாய் வாழும்படி எவருமே எந்த சந்தர்பத்தையும் எனக்கு தர வில்லை என்றான். அவன் தன் குற்றத்தைக் குறித்து மனம்வருந்தினால், அவனு க்கு உதவும்படி ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கலாம் என்று எதிர்பார்த்தி ருந்த நீதிபதி, அவன் தன் குற்றங்களை நியாயப்படுத்தி சுயஅனுதா பத்தை தேடுகின்றானே தவிர, அவன் தனக்கு தானே உதவி செய்ய மனமற்றவனாக இருக்கின்றான் என்று கண்டு கொண்டார். நீதிபதி மறுப டியும் அவனை நோக்கி: உனக்கு மற்றவர்கள் உதவி செய் வதற்கு, நீ ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தை மற்றவர்களுக்கு கொடுத்திருக்கின்றாயா என்று கேட்டார். அந்த கேள்விக்கு அவன் பதில் சொல்லாமல் தடுமா றுவதை நீதிபதி கண்டார். பிரியமானவர்களே, சில வேளைகளிலே, வாழ் க்கையிலே திக்கற்ற நிலைமைகள் உண்டாவது சகஜம். சிலர், பல துன்ப ங்களை தமது வாழ்வில் கடந்து வந்திருக்கின்றார்கள். ஆனால், அதிலி ருந்து வெளியே றுவதற்குரிய வழியை தேட வேண்டுமே தவிர மாறாக சுயஅனுதாபத்தின் கடலிலே மூழ்க்கிப் போய்விடக்கூடாது. பாடசாலை யிலே ஆசிரியர்கள் என்னை கண்டித்தார்கள் அதனால் பாடசாலைக்கு போவதை நான் விட்டுவிட்டேன். ஆலயத்திலே போதகர் என்னை ஒழு ங்காக நடத்தவில்லை அதனால் ஆலயத்திற்கு செல்வதை நிறுத்திவிட் டேன். மருத்துவர் எனக்கு ஒழுங்காக வைத்தியம் செய்யவில்லை அத னால் மருத்துவ சாலைக்குச் செல்வதை விட்டுவிட்டேன் என்று சிலர் தங் கள் சுயசரிதையை கூறிக் கொள்வதுண்டு. இப்படியாக வாழ்பவர்கள் இறு தியிலே தேவனைக்கூட குற்றப்படுத்தி விடுவார்கள். எனவே, நாம் அப்ப டிப்பட்ட வழிகளை தெரிந்து கொள்ளாமல், வருத்தப்பட்டு பாரம் சுமப்ப வர்களுக்கு இளைப்பாறுதல் தரும்படி அழைக்கும்; நம் ஆண்டவர் இயே சுக்கு ஒரு சந்தர்ப்பத்தை நாம் கொடுக்க வேண்டும். அடிமைத் தனங்க ளிலிருந்து விடுதலையை பெற்று, சுய அனுதா பத்தில் அழிந்து கொண்டிருக்கும் மற்றவர்களையும் ஆண்டவர் இயேசுவோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

என்னை மறவாமல் அரவணைக்கும் தேவனே, நெருக்கத்தின் காலத்திலே நான் சோர்ந்து பின்னிட்டு போகாதபடிக்கு, உம்மண்டை கிட்டிச் சேரும்படி எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநட த்துவீராக. இரட்ச கர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 40:27-31