புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 10, 2022)

நல்லாலோசனைகள்

நீதிமொழிகள் 6:23

கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவ வழி.


ஒரு மனிதனானவன் தன் சரீரத்திலே ஏற்பட்ட சில அசௌகரிங்களின் நிமித்தம், தன் குடும்ப மருத்துவரை சந்திக்கும்படி சென்றிருந்தான். மருத் துவ பரிசோதனைகளை செய்து, முடிவுகளை ஆராய்ந்து பார்த்த அந்த மருத்துவரானவர், அந்த மனிதனை நோக்கி: உன் சரீரத்தை ஆரோக்கியமாக பேணுவதற்கு: 1. முன்குறித்த நேரங்களிலே ஆரோக்கியமான ஆகாரங்களை உண்ண வேண்டும். 2. மென்பானங்களை தவிர்த்து குறிப்பிட்டளவு தண்ணீர பருக வேண்டும். 3. மாலை நேரத்திலே வேலைக்காகவோ, பொழுது போக்குக்காகவோ கம்யூட்டர் சாதனங்களில் அதிக நேரம் செலவிடாமல்; குறித்த நேரத்திற்குள் நித்திரைக்குச் செல்ல வேண்டும். 4. தகுந்த உடற்பயிற்சியை தினமும் செய்ய வேண்டும் என்று கூறி, மறுபடியும் ஆறு மாதங்களில் தன்னை வந்து சந்திக்கும் படியும் கூறினார். ஒரு வருடம் கழித்து அவன் மறுபடியும் தன் குடும்ப மருத்துவரை சந்திக்க சென்றான். அந்த மருத்துவரானவர், மறுபடியும் மருத்துவ பரிசோதனைகளை செய்து முடித்து அந்த மனிதனாவனை நோக்கி: நான் சொன்ன ஆலோசனைகளை கடைப்பித்தாயா என்று கேட்டார். அவன் மருத்துவரை நோக்கி: நீங்கள் கூறியபடி என்னால் செய்ய முடியவில்லை. என் வேலைப்புழுவானது அதிகமாயுள்ளது என்று கூறினான். மருத்துவர் அவனை நோக்கி: உன் வாழ்விலே உனக்கு எது முக்கியம்? எதற்காக உழைக்கின்றாய்? நீ நோய் கொண்டு ஒடுங்கிப் போனால் உன் வேலையையும் இழந்து விடுவாய். உன்னு டைய வாழ் வின் ஆரோக்கியமானது உன் தீர்மானங்களிலேயே தங்கி யிருக்கின்றது என்றார். பிரியமானவர்களே, அந்த, மருத்துவ ஆலோசனை யானது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைககும் ஏற்புடையதாக இரு க்கின்றது. நம்முடைய ஆன்மீக வாழ்வின் ஆரோக்கியத்தை பேணிப்பாது காப்பதற்கு ஜீவ உணவாகிய வேதத்தை நாம் அனுதினமும் வாசித்து தியானிக்க வேண்டும்;. நாம் கற்றுக் கொண்டவகளை நம் வாழ்வின் கிரியைகளிலே நடப்பிக்க வேண்டும். கர்த்தருடைய வேதமே நம் ஆன்மீக ஊட்டச்சத்தும், அருமருந்தாகவும் இருக்கின்றது. இதை உட்கொள்ளா தவன் ஆன்மீக நோய் கொண்டு ஒடுங்கிப் போகின்றான். கர்த்தருக்கு பய ந்து, அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடக்கின்ற மனுஷன், தன் ஆத் துமாவை பாதாளத்தின் வல்லடிக்கு விலக்கிக் காத்துக் கொள்கின்றான். நல்ஆலோசனைகள் நமக்கு தராளமாகவே உண்டு, ஆனால் தெரிவுகளும் தீர்மானங்களும் நம்முடையது. நமது தெரிவுகளும் தீர்மானங்களும் நாம்; சென்றடையும் இடத்தை நிர்ணயிக்கிறது.

ஜெபம்:

அன்பின் தேவனே, உம்முடைய சத்திய வார்த்தைகளே என் ஆத்துமாவிற்கு ஒளஷதத்தை தரும் என்பதை எப்போதும் உணர்ந்தவ னாக,உம் வார்த்தையின் வழியிலே வாழ என்னை உணர்வுள்ளவனாக்குவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 119:174