புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 09, 2022)

பலர் முன்னினையிலே நல்ல அறிக்கை

1 கொரிந்தியர் 1:21

உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிக்கிறவர் களை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.


ஒரு கம்பனியிலே வேலை பார்த்து வந்த சில உத்தியோகத்தர்கள், மதியஉணவு உண்ணும் வேளையிலே, மனித குலத்தின் அறிவாற்றலை யும், பரிணாம வளர்ச்சியையும், விஞ்ஞான, தொழிலநுட்ப விருத்தியை யும் குறித்து மெச்சக் கூடிய அறிவுத்திறனுடன் பேசிக் கொண்டிருந்தா ர் கள். அதுவுமல்லாமல் கடவுள் நம்பிக்கை என்பதும், நாம் காண் பவை கள் யாவும் தேவனால் சிருஷ்டிக்க ப்பட்டதென்பதும், அறிவற்றவர்களு டைய சம்பாஷணையாக இருக்கின் றது. தங்களிடம் எதுவும் இல்லாதவ ர்க ளுக்கே தேவ நம்பிக்கை தேவை. மனிதனுடைய இத்தனைப் ஆக்கங் களை கண்ட பின்னரும் கூட மனிதர்கள் தேவனை தேடுகின்றார்களே என்று தங்களுக்குள்ளே பேசிக்கொ ண்டிருந்தார்கள். ஆனாலும் அவர் கள் மத்தியிலே ஒரு சில கிறிஸ்த வர்களும் இருந்தார்கள். அவர்களோ வேலையிலே பிரச்சனைகளை தேடிக் கொண்டால் குழப்பமாகிவிடும். நம்மையும் தரக்குறைவாக இவர்கள் நினைத்து விடுவார்கள் என்று சிலர் ஒன்றும் கேளாதவர்களைப் போல இருந்து விட்டார்கள். ஆனால், அங்கிருந்த மனிதர்களில் ஒருவன் சற்றும் தயங்களாமல் அவர்களை நோக்கி: நான் ஒரு கிறிஸ்தவன். இயேசு கிறிஸ்துவலே மட்டுமே மனிதகுலத்திற்கு இரட்சிப்பு உண்டு என்பதையும் நான் அறிவேன் என்று தயவாக அவர்களுக்கு கூறினான். அந்த இடத்திலே சிறிது நேரம் நிசப்தம் உண்டாயிற்று. சிலரின் முகத்தின் நகைப்பு உண்டாயிருந்தது. சிலர் அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட தெரிவு என்று சமாளிக்க பார்த்தார்கள். ஒருவர் அது உன்னுடைய நம்பிக்கை என்றார். ஆனால், அந்த இடத்திலே இயேசுவை அறிக்கையிட்ட மனிதனானவன், தன் வேலை போய்விடும் என்பதைக் குறித்தோ, பதவி உயர்வுகள் கிடை யாமற் போய்விடுமோ, மற்றவர்கள் என்னை தரக் குறைவாக எண்ணுவா ர்கள் என்றும் கவலைப்படாமல், சற்றும் மனம் பதறாமல் இருந்தான். ஏனெனில், அவன் தனது நம்பிக்கையில் உறுதியானவன். அவன் நங்கூரம் இயேசுவில் இருந்தது. பூமியும், அதன் நிறைவும் கர்த்தருடையது என்பதை திட்டமாக அவன் அறிந்தவன். பலர் முன்னிலையிலே இயேசுவை குறித்து பேசவெட்கப்படாதவன். நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; என்றும் அவருடைய நாமம் இன்றும் பலருக்கு இடறலாயும் உலக ஞானிகளுக்கு பைத்தியமாயும் இருக்கின்றது. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தினாலே பைத்தியமானவர்கள் என்று கருதப்படு பவர்களை தெரிந்துகொண்டார்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, இந்த உலகத்திலே வாழும் நாட்களிலே நான் உம்மைப் பற்றி தயக்கமில்லாமல் அறிக்கை செய்யும் உறுதியுள்ள இருதயத்தை எனக்கு தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 14:1