புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 07, 2022)

மனநிம்மதி தேவை

மத்தேயு 7:24

நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.


அநேக ஆண்டுகளாக தேவனை அறிந்திருந்தும், தவறாமல் சபை கூடி வருதலை விட்டுவிடாதிருந்தும், இன்று என் வாழ்வில் பல காரியங்க ளினாலே அழுத்த ப்படுகின்றேன். படிப்பும் பட்டமும் இருந்தும் மன நிறைவற்றவனாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கின்றது. இதன் காரணம் என்ன என்று நான் சிந்தித்துப் பார்கின்றேன் என்று ஒரு மனிதனானவன், தன் பாட்டனாரிடம் தன் மனநிலைமையைக் குறித்து சொல்லிக் கொண்டான். எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்த அந்த வயதான பாட்டனானவர், தன் பேரனை நோக்கி: தம்பி, சபைக்கு செல்வதும், தேவனை குறித்து அறிந்து கொள்வதும் நல் லது. ஆனால் இன்று மனிதர்கள் மனதார தேவனை சேவிக்கின்றார்களா? ஆண்டவர் இயேசு என்று கூப்பிடுகி ன்றவர்களின் வாழ்க்கையிலே, இயேசு உண்மையாகவே ஆண்டவராக இருக்கின்றாரா? அவர் கூறிய வார்த்தைகள் அவர்களை ஆளுகை செய்கின்றதா? இந்தக் கேள்விகளை ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். மனிதர்கள் தங்கள் மனவிருப்பப்டி கல்வியை கற்று மனதிற்கு பிடித்த வேலையை தெரிந்து கொண்டு, தாங்கள் நினைத்தபடி வீடுகளை வாங்கிக் கொள்கின்றார்கள். தங்கள் கண்களுக்கு கவர்ச்சியானவர்களையும், தங்கள் குடும்பத்திற்கு ஏற்றவர்களையும் திருமணம் செய்ய நிச்சயித்துவிட்டு இது கர்த்தரால் ஆயிற்று என்று திருமண அழைப்பிதலிலே அச்சிடுகின்றார்கள். தம்பி, நீ என் மனத்திற்கு பிரிய மானவன், உன்னை குற்றப்படுத்தும்படி இவைகளை நான் உன்னிடம் கூறவில்லை. தரித்து நின்று சிந்திக்க நேரமில்லாமல், நீ வெகுவேகமாக ஓடிக் கொண்டிருந்தாய், இப்போதாவது உன் வாழ்க்கையைக் குறித்து ஆழமாக சிந்திக்கின்றாய். நம்முடைய வாழ்க்கையிலே எத்தனை பிரச ங்கங்களை கேட்கின்றோம்? அவைகளில் எத்தனை பிரசங்கங்களைக் குறி த்து விமர்சிக்கின்றோம்? கேட்டவைகளில்; எதை கைகொள்ளுகின் றோம்? நீயே அதை சிந்தித்துப் பார். கன்மலையின் மேல் கட்டியவீடு அசையாது. தேவ வார்த்தையைக் கேட்டு அதை தன் வாழ்ககையில் கைகொள்ளுகின்றவன் அந்த அசையாத வீட்டைப் போல இருக்கின் றான். எனவே, இன்றிலிருந்து தேவ வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடப்பதில் அதிக கவனத்தை செலுத்து என்று அறிவுரை கூறினார்.

ஜெபம்:

சமாதானம் தரும் தேவனே, உம்முடைய வார்த்தையிலே நிலை த்திருக்கின்றவர்கள், அதின் நிறைவான சமாதானத்தை கண்டடைகின்றா ர்கள். நானும் உம்முடைய வார்த்தையில் நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோசுவா 24:15