புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 06, 2022)

தேவ நீதி நிறைவேற இடங்கொடுங்கள்

நீதிமொழிகள் 28:13

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.


ஒரே பாடசாலையிலே கல்வி கற்று வந்த இரண்டு மாணவர்கள், மாலை வேளைகளிலே சில பாடங்கிளில் மேலதிக தனிப்பட்ட உதவிக்காக மாலை வகுப்புகளுக்கு செல்கின்றோம் என்று தம் பெற்றோரிடம் வகு ப்புக்கான கட்டணங்களை பெற்றுக் கொண்டு, அவைகளை சினிமா பார்ப்பதிலும், வேறு களியாட்டங்களிலும் செலவு செய்து வந்தார்கள். பாடசாலையிலே நடந்த தவணைப் பரீட்சையிலே பல பாடங்களிலே மிக வும் குறைந்த புள்ளிகளை பெற்ற தால் இவர்கள் சித்தியடையமல் போய் விட்டார்கள். இவ்வள வாக படிந்து வந்த தங்கள் பிள்ளை கள் குறைவான புள்ளிகளை பெற்ற போது, பெற்றோர்கள் மிகவும் அதி ர்ச்சியடைந்து, பாடசாலையையும், அதிபரையும், ஆசிரியர் களையும் குறித்து விமர்சிக்க தொடங்கி விட் டார்கள். தமது பிள்ளைகளை குறித்த பாடசாலையைவிட்டு தாங்கள் மாற்ற வேண்டும் என்று தீர்மானம் செய்து, பாடசாலை அதிபரை சந்தி க்கும்படி செல்ல இருந் தார்கள். வீட்டிலே நடைபெறுகின்ற சம்பவ ங்களை குறித்து கலக்கமடைந்த அந்த இரண்டு மாணவர் களில் ஒரு வன், இதை அப்படியே விட்டு விடுவோம். பெற்றோர் நாம் அல்ல, பாட சாலை ஆசிரியர்கள்தான் இதற்கு காரணமென்று எண்ணுகின்றார்கள் என்றான். அதற்கு மற்றய மாணவன், அவனை நோக்கி: நண்பா, நாம் எத் தனையோ தவறுகளை செய்து, பல குழப்பங்களை நம்முடைய வாழ்வி லும், குடும்பத்திலும், பாடசாலையிலும் ஏற்படுத்திவிட்டோம். அந்த குற் றங்களை மூடி மறைப்பதற்காக நாம் இன்னும் அதிக குற்றங்களை செய் யாமல், இப்போது நாம் செய்ய வேண்டிய நீதியான காரியத்தை செய் வோம். தண்டனைகளுக்கு நாம் முகக்கொடுக்க நேரிடலாம் ஆனால் நாம் நம்முடைய குற்றங்களை மூடி மறைப்பதற்கு பெற்றோரை ஏமாற்றி, ஆசி ரியர்களை குற்றப்படுத்தி, நம் வாழ்க்கையை நாமே கெடுத்துக் கொள்ள கூடாது என்றான். பிரியமானவர்களே, இவ்வண்ணமாகவே இன்று சில விசு வாசிகள், தங்கள் மேலான அழைப்பை மறந்து, தங்கள் குற்றங்களை மூடி மறைப்பதற்காக சபையையும், ஊழியர்களையும், மற்றய விசுவாசிகளை யும் குற்றப்படுத்த முயல்கின்றார்கள். மற்றவர்களை குற்றப்படுத்தி வெற்றி காண்பதால், நாம் நீதிமான்களாக மாறப்போதில்லை. எனவே, நாம் குற்றங்களை மூடி மறைக்கும்படி மேலும் குற்றங்களை செய்யாமல், தேவ நீதி நிறைவேறும்படிக்கு நம்முடைய வாழ்விலுள்ள குறைகளை தேவனிடம் அறிக்கையிட்டு, வாழ்வடையும் வழியை தேடுவோமாக.

ஜெபம்:

ஒரு குற்றறத்தை மறைக்க இன்னுமொரு குற்றத்தை செய்து என் வாழ்வை நான் சிதறடிக்காமல், தேவ நீதி என் வாழ்வில் நிறைவேற இடங்கொடுக்கும்படி உண்மையுள்ள இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 1:9